பந்து வீச்சாளர்களுக்கு சிறப்பு பயிற்சி

Feb 6, 2023 - 21:19
Feb 6, 2023 - 21:59
 334
பந்து வீச்சாளர்களுக்கு சிறப்பு பயிற்சி

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மாவட்டங்களை சார்ந்த 14 வயது முதல் 24 வயது  வரையிலான இளம் வேக மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்து சிறப்பு பயிற்சி அளித்து மாநில மற்றும் தேசிய அளவில் பங்கு பெற உதவும் வகையில் மாவட்ட கிரிக்கெட் சங்கங்களோடு இணைந்து சிறப்பு முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.

அதற்கான தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் திருச்சி மாவட்டத்தை சார்ந்த கிரிக்கெட் வீரர்கள் ( பந்து வீச்சாளர்கள்) தங்களது பெயர்களை வருகிற பிப்ரவரி மாதம் 24ம் தேதி (வெள்ளி கிழமை) மதியம் 5 மணி வரை திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் இருப்பிட சான்றிதழ் ( ரேஷன் கார்டு) நகலோடு பதிவு செய்யலாம்.

திருச்சி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட வீரர்களுக்கான  தேர்வு திருச்சி சாரநாதன் இன்ஜினீயரிங் காலேஜ்  மைதானத்தில் வருகிற பிப்ரவரி 25 (சுழற்பந்து  வீச்சாளர்கள்) மற்றும் 26 (வேகபந்து வீச்சாளர்கள்) தேதிகளில் நடைபெறும்.

மேலும் விபரங்களுக்கு அலைபேசி எண் +917010757073 -யை தொடர்பு கொள்ளலாம் என  திருச்சி மாவட்ட கிரிக்கெட் செயலர்  கா.சஞ்சய் தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn