திருச்சி பழைய காவிரி பாலத்தில் வாகனங்கள் செல்ல பாலத்தின் உறுதி தன்மை ஆய்வு - ஆட்சியர் தகவல்

திருச்சி பழைய காவிரி பாலத்தில் வாகனங்கள் செல்ல பாலத்தின் உறுதி தன்மை ஆய்வு - ஆட்சியர் தகவல்

திருச்சி - ஸ்ரீரங்கத்தை இணைக்கும் காவிரி பாலத்தை கடந்த நவம்பர்  20-ம் தேதி முழுமையாக அடைக்கப்பட்டு  போக்குவரத்திற்கு முற்றிலும் தடை செய்யப்பட்டு சீரமைக்கும் பணிகள் ரூ.6.87 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. அணைத்து வாகனங்களும்  சென்னை புறவழிச்சாலை வழியாக சென்று வருகின்றன.

போக்குவரத்து நெரிசலை குறைக்க காவிரி பாலத்துக்கு அருகே உள்ள கடந்த 1754-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்டுள்ள பாலத்தில் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு மட்டும் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. திருச்சி பழைய காவிரி பாலம் இருசக்கர வாகன போக்குவரத்துக்கு செல்ல பாலத்தின் உறுதி தன்மையை குறித்து ஆய்வு நடைபெறுவதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தகவவ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பழைய காவிரி பாலத்தில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர் அப்போது அவர்கள் கூறுகையில்.... பாலத்தில் இருபுறங்களில் உள்ள குழாய்களிலும் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இருசக்கர வாகனங்கள் உள்பட எவ்வித போக்குவரத்திற்கும் சரியாக இருக்காது என்றார் .

எனவே தற்போது  வரை இந்த பழைய காவிரி பாலத்தில் இருசக்கர வாகனங்கள் அனுமதி பற்றி எந்த ஒரு  முடிவும் எடுக்கப்படவில்லை. ஏதேனும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டால் மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH 

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO