உயர்கல்வியை தொடராத மாணவர்களுக்கு கல்லூரி கனவு விழிப்புணர்வு நிகழ்ச்சி

உயர்கல்வியை தொடராத மாணவர்களுக்கு கல்லூரி கனவு விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சியில் இன்று நடைபெற்றது.2023 -2024 ஆம் ஆண்டில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத, இடை நின்ற மாணவர்கள் 2024-2025 ஆம் கல்வி ஆண்டில் உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் என மொத்தம் 3658 மாணவர்கள்
கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உயர்கல்வி படிப்பை தொடர தகுந்த ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல் வழங்கு வகையில் நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு நிகழ்ச்சி திருச்சி மாவட்டத்தில் இன்றும் வரும் 16ஆம் தேதி ஆகிய இரு தினங்களில் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கத்தில் நடைபெறுகிறது.
இன்று தொடங்கிய உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியில் திருச்சியில் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி மேற்கு திருவரம்பூர் மணிகண்டம் மணப்பாறை வையம்பட்டி மருங்காபுரி மற்றும் அந்த நல்லூர் ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட மாணவர்களுக்கும் லால்குடி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட லால்குடி புள்ளம்பாடி
மன்னச்சநல்லூர் முசிறி துறையூர் தொட்டியம் உப்பிலியபுரம் மற்றும் தாத்தையங்கார் பேட்டை உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வரும் 16ஆம் தேதியும் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடைபெறுகிறது இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர் அவர்களுக்கு துறை சார் வல்லுநர்கள் ஆலோசனைகள் வழங்கினர் மேலும் பல்வேறு கல்லூரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்
வகையில் தமிழக அரசு கல்லூரி கனவு என்கிற திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி உள்ளது அந்த வகையில் 2023 திருச்சியில் உள்ள அரசு பள்ளி மாநகராட்சி பள்ளி ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளிகளில் 2023 24 கல்வி ஆண்டு மற்றும் 202425 ஆம் கல்வி ஆண்டில் உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத 3658 மாணவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision