திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை விளக்கு அமைக்க டெண்டர் -துரை வைகோ

திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் (பால்பண்ணை முதல் டோல் பிளாசா வரை) போதிய சாலை விளக்குகள் இல்லை. அதனால் அந்த இடம் இருள் சூழ்ந்த இடமாக காட்சி தருகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர் மற்றும் விபத்துகள் ஏற்படுகின்றது என்பதை சுட்டிக்காட்டி, தேசிய நெடுஞ்சாலைத்துறை (NHAI) மண்டல அலுவலருக்கு நேற்று (13.05.2025) கோரிக்கை கடிதம் எழுதினேன். அது குறித்து இன்று (14.05.2025) தஞ்சையில் உள்ள NHAI திட்ட இயக்குனரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, மேற்குறிப்பிட்ட தேசிய நெடுஞ்சாலையில் விளக்குகள் இல்லாத அனைத்து இடங்களிலும் புதிய சாலை விளக்குகள் அமைக்கவும், பழைய சாலை விளக்குகளை பழுது நீக்கிடவும் டெண்டர் கோரப்பட்டுள்ளதாக பதிலளித்துள்ளார்.
அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதோடு, விரைந்து அப்பணிகளை முடித்து விளக்குகளை அமைத்துத்தர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.என்று துரை வைகோ தெரிவித்தார்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision