நாளை (15.05.2025) திருச்சியில் எழுச்சித் தமிழர் திருமாவளவன் கலந்து கொள்ளும் டெல்டா மண்டல ஆலோசனைக் கூட்டம்

மே-31 திருச்சியில் *மதசார்பின்மை காப்போம்* மாபெரும் பேரணி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித்தமிழர் முனைவர். தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெறுகிறது.
பேரணி தொடர்பான டெல்டா மண்டல கூட்டம் ஆலோசனைக் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் பெமினா ஹோட்டலில் (லோட்டஸ் ஹாலில்) காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் டெல்டா மண்டல மாவட்டத்திற்கு உட்பட்ட மாநில, மண்டல, நாடாளுமன்ற தொகுதி செயலாளர், மாவட்ட செயலாளர்
மற்றும் மகளிர் அமைப்புகள், இஸ்லாமிய சனநாயக பேரவை, தொழிலாளர் விடுதலை முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் திரளாக பங்கேற்க உள்ளனர்.ஊடக மற்றும் அச்சு ஊடக செய்தியாளர்கள், புகைப்பட மற்றும் ஒளிப்பதிவாளர்கள் பங்கேற்று செய்திகளை வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision