பழைய மேரிஸ் இரயில்வே மேம்பாலம் அகற்றம்- இரயில்வே அதிகாரிகளுக்கு நன்றி- திருச்சி எம்.பி

திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய அளவில் மிகவும் குறுகலான மேம்பாலமாக இருந்த, திருச்சி கோட்டை இரயில் நிலையத்தின் மேரிஸ் மேம்பாலமானது இடிக்கப்பட்டு, போக்குவரத்திற்கு வசதியாக பெரிய பாலம் அமைத்து, பாதையை விரிவு படுத்தும் பணியில், மாநகராட்சி துரிதமாக செயல்பட்டுவந்த நிலையில், இரயில்வே துறையில் மேம்பாலம் இடிக்கும் பணியில் ஒன்றரை ஆண்டுகாலம் தொய்வு ஏற்பட்டிருந்தது.
இதனை சுட்டிக்காட்டி, தென்னக இரயில்வே பொது மேலாளரிடமும், திருச்சி இரயில்வே கோட்ட மேலாளரிடமும் நான் வைத்த கோரிக்கையை ஏற்று 13.05.2025 அன்று பழைய இரயில்வே மேரிஸ் மேம்பாலம் இடிக்கப்படும் என்று அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று, மேம்பாலம் இடிக்கப்பட்டு, அறிவித்திருந்தபடி அவர்களின் பணியை முடித்துள்ளனர்.
அதற்காக, அலைபேசி வழியாக DRM அவர்களுக்கும் மற்றும் திருச்சி கோட்ட இரயில்வே அதிகாரிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டேன்.
விரைவில் புதிய மேம்பாலம் அமைக்கப்பெற்று திருச்சி மக்களுக்கு வசதியான புதிய போக்குவரத்து அனுபவம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். என்று துரை வைகோ அவர்கள் தெரிவித்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
#marisrailwaybridge #trichyrailways
#vaiko #trichymp #MKStalin #UdhayanidhiStalin #EVVelu #DuraiVaiko #AnbilMaheshPoyyamozhi #dmk #CMOTamilNadu #SoniaGanthi #RahulGanthi #PriyankaGandhi #Congress #INDIA #INDIAllaince