திருச்சி ரயில் நிலையத்தில் வந்த சூப்பர் வசதி... மக்கள் மகிழ்ச்சி!

திருச்சி ரயில் நிலையத்தில் வந்த சூப்பர் வசதி... மக்கள் மகிழ்ச்சி!

தமிழகத்தின் பல்வேறு ரயில் நிலையங்களில் புதிய வசதியை தெற்கு ரயில்வே சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ரயிலில் பயணம் செய்வது என்றால் மக்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதுவும் இரவு நேரங்களில் ரயில் பயணம் என்பது அனைத்து மக்களும் விரும்பக் கூடியது.

பொதுவாக ரயிலில் பயணம் செய்யும்போது நாம் வீட்டிலிருந்து உணவுகளை எடுத்துச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும். ஏனென்றால் ரயில் நிலையங்களில் உள்ள உணவுகள் அந்த அளவுக்கு நன்றாக இருக்காது. மேலும் பலருக்கும் உடல்நிலை கோளாறு ஏற்படுத்தும் நிலை இருப்பதால் அச்சத்துடனேயே வீட்டிலிருந்து உணவுகளை எடுத்துச் செல்வர். மேலும் அங்கு விற்கப்படும் உணவுகள் விலையும் மிகவும் அதிகமாக இருப்பதாகவும், மக்கள் எண்ணி வீட்டில் இருந்தே சமைத்து கொண்டு செல்வது வழக்கம். இவ்வாறு இருக்க தற்போது புதிய முயற்சியை தெற்கு ரயில்வே சார்பில் எடுக்கப்பட்டுள்ளது.

அதாவது மிகவும் குறைந்த விலையில் உணவுகளை விற்பனை செய்ய தற்போது நடைமேடையிலேயே கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதுவும் நடைமேடையிலேயே தெற்கு ரயில்வே சார்பில் ஊழியர்களுடன் உணவு விற்பனைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் எக்கனாமி மீல் என்று வெரைட்டி ரைஸ் 20 ரூபாய்க்கும், அதாவது லெமன் சாதம், தயிர்சாதம், பருப்பு சாதம், ஊறுகாயுடன் சேர்த்து ஒரு மரத்திலான ஸ்பூன் ஒன்றும் வழங்கப்படும்.

இதேபோல ஜனதா கானா என 20 ரூபாய்க்கு பூரி வழங்கப்படும். இதனைத் தொடர்ந்து ஸ்நாக்ஸ் மீல் என்று 50 ரூபாய்க்கு, சவுத் இந்தியன் வகை அரிசி வகைகளும், லெமன் ரைஸ், சாம்பார் சாதம், தயிர்சாதம், பொங்கல், மசாலா தோசை அதுவே 50 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. மேலும் தண்ணீர் 3 ரூபாய்க்கும் கிளாசில் சீல் இடப்பட்டு கொடுக்கப்படுகிறது. இது தற்போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இது திருச்சி, தஞ்சாவூர் போன்ற தமிழகத்தின் பல்வேறு ரயில் நிலையங்களிலும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே மக்கள் அனைவரும் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision