இனிப்புகள் மரக்கன்றுகள் பாலாபிஷேகம் மாலை மரியாதை!! திருச்சியில் காமராஜர் பிறந்தநாள் கொண்டாட்டம்!!

இனிப்புகள் மரக்கன்றுகள் பாலாபிஷேகம் மாலை மரியாதை!! திருச்சியில் காமராஜர் பிறந்தநாள் கொண்டாட்டம்!!

கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு இன்று திருச்சியில் இனிப்புகள், மரக்கன்றுகள், பாலாபிஷேகம், மாலை மரியாதை செய்து கொண்டாடினர். இதில் பல கட்சியினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திருச்சியில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் கழக முதன்மைச் செயலர் கே.என் நேரு தலைமையில் பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் 118வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில், அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர்களில் ஒருவரும்மான கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜரின் 118வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினரும்மான, அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ் மற்றும் ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் கழக  செயலாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

Advertisement

காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்ததினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு முன்னாள் திருச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்குரைஞர் மா.சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்பு,மரகன்றுகள் வழங்கப்பட்டது.இதில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவரும், முன்னாள் கவுன்சிலருமான சிந்தாமணி செந்தில்நாதன், அண்ணாசிலை விக்டர், நிர்மல்குமார், பஜார்மைதீன், ஆட்டோகார்த்திக், திம்மை செந்தில்குமார், வாய்ஸ் மணிகண்டன், சிவாஜி பெரியதம்பி, செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி காங்கிரஸ் அலுவலகம் அருணாசல மன்ற வளாகத்திலிருந்த காமராஜர் சிலைக்கு காமராஜர் பேரவை தலைவர் கள்ளிக்குடி குமார் தலைமையில் பாலாபிஷேகம் செய்யப்பட்டது.முடிவில் காமராஜர் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் கொண்டுவரவேண்டும் என அவரது சிலையின் கீழ் உறுதிமொழி எடுத்துக்கொள்ளபட்டது.