நிலுவைத் தொகை வழங்க வலியுறுத்தி கிராமப்புற சுகாதார பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு!!

நிலுவைத் தொகை வழங்க வலியுறுத்தி கிராமப்புற சுகாதார பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆஷா எனப்படும் தற்காலிக கிராமப்புற சுகாதார பணியாளர்கள் நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Advertisement

கொரோனா காலகட்டத்தில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட சிறப்பு நிலுவை தொகையை திருச்சி மாவட்டத்திலுள்ள உப்பிலியபுரம், ஏரகுடி மற்றும் மேட்டூர், செங்காட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் வழங்கப்படவில்லை என்றும், இந்த நிலுவை தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும்,

Advertisement

ஆஷா பணியாளர்களுக்கு மாத ஊக்கத்தொகை, ஆஷா பணியாளர்கள் அனைவரையும் நிரந்தரம் செய்து மாதம் 21 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும் எனவும், இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.