டாஸ்மாக் வருமானத்தை மட்டுமே நம்பி ஆட்சி நடத்தும் ஒரே மாநிலம் தமிழகம் தான் - திருச்சியில் பாஜக அண்ணாமலை பேட்டி
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புதுக்கோட்டையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்தில் வந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில்... பிஜேபி ஆர்எஸ்எஸ் உடன் சமரசம் செய்து கொள்வதற்கு மற்றும் கூட்டணி வைத்துக் கொள்வதற்கு குடும்ப ஆட்சியில் இருக்க கூடாது. ஊழலற்ற அரசு மற்றும் மக்களுக்கு நல்லாட்சி புரிய வேண்டும் என்று இருக்க வேண்டும். இது மூன்றுமே இல்லாததால் முதலமைச்சருக்கு அருகதை இல்லை என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். பாஜகவுடன் திமுக கூட்டணி வைப்பதற்கு எக்காலத்திலும் எந்த ஒரு தகுதியும் கிடையாது...
திமுகவின் நிலைமை என்பது திமுக கட்சியை தாண்டி ஒரு கூத்து பட்டறை போல உள்ளது. கருத்துக்களை, கருத்துகளால் எதிர்கொள்ள திமுகவில் எந்த ஒரு தலைவருக்கும் தகுதி கிடையாது. டெல்லி செல்வது கும்பிடுவதற்கு சமரசம் செய்வதற்கோ இல்லை என முதல்வர் புறப்படும் முன்பு சொல்கிறார், பிரதமர் முன்னிலையில் முால்வர் ஸ்டாலின் சீட்டு நுனியில் அமர்ந்திருப்பதை பார்த்தாலே தெரிகிறது திராவிட மாடலை பற்றி, எனவே முன்னுக்குப் பின் முரணாகத்தான் பேசுகிறார். நிதி அமைச்சர் கைதட்டலுக்காக எது வேண்டுமானாலும் பேசலாம் என்று பேசுகிறார். பேசுவதற்கு ஆதாரம் மற்றும் அர்த்தம் இருக்க வேண்டும்.
இலவசங்களால் தமிழகம் முன்னேறி இருக்கிறதா என்பதை அவர்களும் உள்ள நோபல் பரிசு பெற்றவர்களை கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். இலவசம் கொடுப்பதனால் தமிழகத்தில் வளர்ந்தவர்கள் கோபாலபுரம் குடும்பத்தினர் மட்டுமே. கமிஷன் மட்டுமே அரசியல்வாதிகளுக்கு லாபம் மக்களுக்கு லாபம் இல்லை. நிதி சுமையில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. ஆட்சிக்கு வந்த போது ஒரு லட்சம் கோடி கடன் பெற்ற நிலையில் தற்போது ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி கடன் கேட்டுள்ளனர்.
ஆகஸ்ட் 15ல் போதையை தமிழகத்தில் விடமாட்டேன் என்று முதல்வர் கூறுகிறார், 14ம் தேதி வரலாற்றில் அதிகபட்சமாக மது விற்பனை நடைபெற்றுள்ளது. அதிக கடன் வாங்குவதில் முதலிடம் அதேநேரம் வாங்கிய கடனையும் முறையாக செலுத்தவில்லை, எந்த அடிப்படையில் இது முன்னேறி கொண்டு இருக்கும் அரசு என்றும் திராவிட மாடல அரசு என்றும் கூறுகிறார் என்பது தெரியவில்லை.
508 தேர்தல் அறிகையில், நூறு அறிக்கைகள் இலவசத்தை குறிப்பிடுவதாக உள்ளது. தமிழக நிதி அமைச்சர் எதையும் செய்யாமல் வாயிருப்பதால் மட்டுமே பேசிக்கொண்டு வருகிறார். இலங்கையில் இதே போன்று நிலைதான் ஏற்பட்டது, இதேபோன்று கொடுத்து ஒரே குடும்பத்தின் கையில் ஆட்சி சென்று, நிதி நிலைமை திவாலாகி அவர்கள் அனைவரும் இலங்கையை விட்டு ஓடும் நிலை ஏற்பட்டது. தமிழகத்தில் குட்டி இலங்கை போல ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழக மக்கள் அரசை தாண்டி வளர்ந்து கொண்டிருப்பதால் இது தெரியவில்லை.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு வேஷம் போடுகிறார். தேர்தலின் போது சிவ பக்தன் என்றும், கர்நாடக தேர்தலின்போது லிங்காயத் பக்தன் எனவும், வழக்கம் போல சர்ச் மற்றும் மசூதிக்கும் செல்வார்கள். ஐ சி யு வில் இருக்கும் காங்கிரஸ் கட்சி அதிலிருந்து வெளியேற முயற்சி செய்கிறார்கள். ஆனால் அவர்களது கொள்கை காரணமாக பலகாலமாக ஐசியூவில் இருக்கிறார்கள்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO