43 ஆண்டுகளுக்குப் பிறகு திருச்சியில் நடந்த தேர்திருவிழா - பக்தர்கள் மகிழ்ச்சி

43 ஆண்டுகளுக்குப் பிறகு திருச்சியில் நடந்த தேர்திருவிழா - பக்தர்கள் மகிழ்ச்சி
திருச்சி பெட்டவாய்த்தலை மத்யார்ஜீனேஸ்வர்  சுவாமி திருக்கோயில் வைகாசி விசாக பிரம்மோற்சவ தேர் திருவிழா கடந்த 3.6.2022 ஆம் தேதி தொடங்கியது. பத்து நாட்கள் வைகாசி விசாக உற்சவங்கள் நடைபெறும் வருகிற 16-ஆம் தேதி வைகாசி வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது. முக்கிய விழாவான  தேர்திருவிழா இன்று நடைபெற்றது. காலை 8. 15 மணிக்கு சுவாமி புறப்பாடு செய்யப்பட்டு திருத்தேரில் வீற்றிருந்தார். 10.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.

பக்தி பரவசத்துடன் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.  முன்னதாக காலை யாகசாலை பூஜைகள் நடைபெற்று சுவாமி  புறப்பாடாகி தேரில் வீற்றிருந்தார்.  மேளதாள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் ஆட்டத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

43 ஆண்டுகளாக தேர் பழுதடைந்து  இருந்த காரணமாக தேர்த்திருவிழா தடைபட்டது. தற்போது தேரை புதுப்பித்து புதுப்பொலிவுடன் கடந்த 1979 ஆம் ஆண்டுக்குப் பிறகு இன்று தான் தேர்த்திருவிழா நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய..... https://t.co/nepIqeLanO