மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜகவினருக்கும் காவல்துறைக்கும் இடையே கடும் வாக்குவாதம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜகவினருக்கும் காவல்துறைக்கும் இடையே கடும் வாக்குவாதம்

திருச்சி பொன்நகர் பகுதியில் உள்ள நியாய விலை கடை எண் 2ல் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைக்க பாரதிய ஜனதா கட்சி கண்டோன்மென்ட் மண்டல் தலைவர் பரமசிவம் வந்தார். அப்போது அங்கிருந்த திமுகவினர் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைக்க எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பாஜகவினருக்கும் திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதில் மோடியின் படத்தை கிழிக்கப்பட்டதால் இரு தரப்பினருமே அடித்துக் கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த கண்டோன்மென்ட் சரக காவல் உதவி ஆணையர் அஜய் தங்கம் இரு தரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். மேலும் பாஜக தலைவரை மாநகராட்சி 22வது வார்டு மாமன்ற உறுப்பினர் ராமதாஸ் தாக்கியதாக பாஜக மாவட்டத் தலைவர் ராஜசேகரன் கண்டோன்மெண்ட் சரக காவல் உதவி ஆணையரிடம் மனு அளித்தார்.

இந்நிலையில் திமுக கவுன்சிலர் கைது செய்ய கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜகவினர் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு அனுமதி மறுத்த காவல்துறையினர் பாஜகவினர் அங்கிருந்து கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். இதற்கு மறுப்பு தெரிவித்த பாஜகவினர் காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து தர்ணா போராட்டத்தில் ஏற்பட்ட பாஜக மாவட்டத் தலைவர் ராஜசேகரன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து போலீஸ் வேனில் ஏற்றி கைது செய்தனர் இதனால் மாவட்ட ஆட்சியர் முன்பு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு மற்றும் பரபரப்பு ஏற்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO