இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் அறிவிப்பது புதிராக உள்ளது - திருமாவளவன் பேட்டி

இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட்ட்ரப் அறிவிப்பது புதிராக உள்ளது -திருச்சி விமான நிலையத்தில் எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன் பேட்டிஇந்திய பாகிஸ்தான்போராக மாறிவிடக்கூடாது.
போர் நிறுத்தப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு வருகிறது. அந்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிராப் செய்தார் என்பது புரியாத புதிராக இருக்கிறது.இந்திய அரசு அல்லது பாகிஸ்தான் அரசு இந்த அறிவிப்பை செய்திருக்க வேண்டும் அமெரிக்க தலையிட்டு இருப்பது, பேச்சுவார்த்தை நடத்தி இருப்பது என்பதை நாம் வருவதற்கு கடமைப்பட்டிருக்கிறோம் என்றாலும் கூட இரண்டு நாடுகளுக்கு இடையே சமாதானம் வேண்டும், நிரந்தர தீர்வு வேண்டும் என்று இந்தியாவில் மட்டுமல்ல ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவன் அனைவரும் விரும்புகிறார்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இந்த வகையில் போர் நிறுத்தத்தை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.ஆனால் நிரந்தர தீர்வு தேவை இரண்டு நாளில் இடையே சுமுகமான பேச்சுவார்த்தை தேவை ஒட்டுமொத்தமாக பயங்கரவாதத்தை ஒழிக்கப்பட வேண்டும்.பயங்கரவாதம் தலை தூக்கினால் இந்தியர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்குமே பெரும் தீங்கு விளைவிக்கும் பயங்கரவாதத்திற்கு எதிரான ஜனநாயக கட்சிகள் அனைவரும் ஆதரிக்கிறோம். இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் இரண்டு நாடுகளுக்கு இடையே சுமுகமான உறவை பேண வேண்டும் நிரந்தர தீர்வை காண வேண்டும் என்று விடுதலை சிறுத்தை கட்சி வரவேற்கிறது.
போர் வேண்டும் என்று விரும்புகிற சக்திகள் ஜனநாயகத்தின் அடிப்படையில் போர் வேண்டாம் என்கிற சொல்லில் வருபவர்கள் மீது அவதூறு ஏற்படுத்தி வருகின்றனர்.அமைதியை சூழல் உருவாகி இருக்கிறது எல்லைகளை பயங்கரவாதத்தை முற்றிலும் துடைத்திட வேண்டும்.
அண்ணாமலை பேச்சி கற்பனை வாதம் அப்படியெல்லாம் ஒரு நாட்டை எளிதாக அழித்து ஒழித்து விட முடியாது. நாடு இல்லாமலேயே பயங்கரவாதம் என்பது இருக்கிறது.அகண்ட பாரதம் என்கிற செயல்திட்ட முறையில் பாஜக செயல்படுகிறது.பாகிஸ்தானை, இந்தியாவோட சேர்ப்பது ஆப்கானிஸ்தான் வரை இந்தியாவில் சேர்ப்பது என்ற இந்த அஜெண்டாவில் வைத்துள்ளனர்.
அமைதி தேவை என்பது தான் பொதுமக்களில் விருப்பம் காஷ்மீரில் வாழ்கின்ற எல்லா மக்கள் கூட அமைதியை விரும்புகின்றனர்.பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டதாக அடிப்படையில் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்குபாரம்பரிய உரிமை என்று சொல்லவில்லை பிறகு அவர்களுக்கு முதல் மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது.தேர் வடத்தை தொடுவது எல்லாம் உரிமை உள்ளது.இதில் ஏதாவது தவறு இருந்தால் அதை நாங்கள் திருத்திக் கொள்கிறோம்.
தற்காலிகமாக அல்ல டாஸ்மாக் கடையில் நிரந்தரமாக மூட வேண்டும்.வெளியுறவு கொள்கை தொடர்பாக தற்பொழுது எந்த கருத்து கூறினாலும் சில இந்துத்துவ செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக மாறிவிடும்.மாமா கூட கூட்டணி இல்லை என்ற உச்ச நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கிறோம் என தெரிவித்தார்.பேட்டியின் போது திருச்சி கரூர் மண்டல செயலாளர் தமிழாதன்,மாவட்டச் செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், சக்திஆற்றரசு, வழக்கறிஞர் கலைச்செல்வன், அன்புகுருசெல்வம், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை, கிட்டு ஆகிய உடன் இருந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision