மழவனூர் கிராமத்தில் ஸ்ரீ பெரியகாண்டி அம்மன் ஆலய கும்பாபிஷேகம்

திருச்சி அருகே மழவனூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பெரியகாண்டி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் - பெருந்திரளான பக்தர்கள் தரிசனம்
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து கீழபெருங்காவூர் ஊராட்சிக்கு உட்பட்ட மழவனூர் கிராமத்தில் எழுந்தருளி உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரியகாண்டியம்மன் ஆலயம் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்துவதற்காக கடந்த 9ம் தேதி காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி
வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் முழங்க யாக சாலையில் பூஜை நடைபெற்றது. இன்று காலை 7 மணிக்கு யாக சாலையில் இரண்டாம் கால பூஜையை தொடர்ந்து மகா பூர்ணா நதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தீபாரதனையும் நடைபெற்றது. பின்னர் காவிரி ஆற்றில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித நீரை வேத மந்திரங்கள் முழங்க கோவிலின் கலசத்திற்கு 9 மணிக்கு மேளதாளங்கள் முழங்க எடுத்து சென்றனர்.
வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் முழங்க 9.30 மணிக்கு மேல் கோவிலின் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மூலவர் ஸ்ரீ பெரியகாண்டி அம்மனுக்கு புனித நீர் ஊற்றி மகா தீபாரதனை நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேகத்தில் மழவனூர் மற்றும் கீழபெருங்காவூர் ஊராட்சி சுற்றியுள்ள பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கும்பாபிஷேகத்திற்கு வருகை புரிந்தவர்களுக்கு பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision