ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பலமுறை மனுவளித்தும்  கண்டுகொள்ளாத மாநகராட்சி

ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பலமுறை மனுவளித்தும்  கண்டுகொள்ளாத மாநகராட்சி

மக்கள் தொகை பெருக்கத்தால் நம்மை அறியாமலேயே இயற்கை வளங்களை ஆக்கிரமிப்பு செய்து இன்றைக்கு அதையே நமக்கு எதிராக பல இன்னல்களை தரும் வகையில்  மாற்றி விட்டோம்.
திருச்சியிலிருந்து உய்யக்கொண்டான் கால்வாய் மூலம்  தஞ்சை மாநகர் வரை பாசனத்திற்காக நீர் செல்லும் அதே நேரத்தில் இந்த உய்யகொண்டன் கால்வாயில் இருந்து பிரிந்து உபரி நீரானது வாய்க்கால்கள் மூலமும் பல பகுதிகளுக்கு  செல்லும்.


 
  மக்களின் ஆக்கிரமிப்பினால் இந்த வாய்க்கால்களின்  பரப்பளவு சுருங்கி விட்டது இதனால் மழைக்காலங்களில் மழைநீர் வீடுகளுக்கு செல்லும் நிலை கூட ஏற்படுகின்றது.
 இதுகுறித்து சமூக அக்கறையோடு வார்டு எண் 63 அண்ணாசாலை முதல் கைலாஷ் நகரில் வசிக்கும்
  சக்திபிரகாஷ் என்பவர் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை  வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை நீக்க கோரி மனு அளித்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று  கூறியுள்ளார் மேலும் அவர்  கூறுகையில்,

 அண்ணாசாலை முதல் தெருவில் உள்ள அரசு குடி நீர் சேமிப்பு தொட்டி மற்றும் வாய்க்கால்  உள்ள பகுதியில் சுமார் 300 அடி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது .இது சம்பந்தமாக திருவரம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் புகார்களை பெற்றுக்கொண்ட பின்னர் காவல் ஆய்வாளர்கள் இது மாநகராட்சிக்கு கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினர்.

பின்னர் எல்லக்குடி JE  அலுவலகத்தில் புகார் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. அதற்கும் இதுவரை எந்த நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து  பொன்மலை கோட்டம் துணை ஆணையரடமும்  ஆக்கிரமிப்பு குறித்து விண்ணப்பிக்கபட்டது.
ஒவ்வொருவரும் வேறு ஒருவரை கை காட்டி கொண்டிருக்கிறார்களே தவிர  இதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என்று வாய் வார்த்தையாக கூட யாரும் பதில் அளிக்கவில்லை.

உய்யகொண்டான் ஆறு வழியாக பாசனத்திற்கும்  உபரி நீர் வெளியேற்றம் வண்ணமாக இருக்கும் வாய்க்கால் பொது நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.மழைக் காலங்களில் வெள்ளம் ஏற்படும் பட்சத்தில் மழைநீர் சீராக செல்லாமல் வீட்டிற்குள் போகும் அபாயமும் ஏற்படும் இந்த பொதுச் ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது.

இது பொது இடம் மற்றும் வாய்க்கால் அளந்து எல்லை வரம்பை  சுட்டிக்காட்டும்  வேண்டும் அதே சமயம் விரைந்து செயல்பட்டு  இந்த ஆக்கிரமிப்புகள் மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்க வேண்டும் என்றும்  மாநகராட்சியிடம் கேட்டுக்கொள்கிறேன் மாநகராட்சி பொதுமக்களின் நலன் கருதி நடவடிக்கை எடுக்கவேண்டும்
 என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH