திருச்சி மாவட்டத்தில் அறப்போர் இயக்கம் வரும் ஞாயிறன்று துவக்கம்
அறப்போர் இயக்கம் 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு மாதம் நீதியும் சமத்துவமும் நிலவும் சமூகத்தை உருவாக்க விரும்பிய சுமார் 25 இளைஞர்களால் சென்னையில் துவங்கப்பட்டது. நீதியும் சமத்துவமுமே நமது இந்திய அரசியல் சாசனத்தின் கனவாக இருக்கிறது. அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டுள்ள குறிக்கோளை நோக்கி வேலை செய்யவதற்காக அறப்போர் இயக்கம் நிறுவப்பட்டதுதன்னைச் சுற்றி இருக்கும் பிரச்சனைகளின் தீர்வுகளில் ஈடுபடக்கூடிய உயிரோட்டமான குடிமைச்சமூகத்தை ஒரு பெரிய மக்கள் இயக்கமாக உருவாக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளது.
வலியவர்களும் மற்றவர்களும் பல விதங்களில் தனது பிரச்சனைகளை கையாண்டு கொள்கிறார்கள். ஆனால் எளியவர்களும் ஏழைகளும் நடுத்தரவர்க்கமும் குரலற்றவர்களும் அநீதியால் பாதிப்படையும்போது மக்களாக ஒன்றுதிரண்டு மட்டுமே தனது பிரச்சனைகளுக்கான தீர்வை அடைய முடியும் எனவும் அதனால் மக்கள் இயக்கம் அவசியமானது எனவும் அறப்போர் இயக்கம் முழுமையாக நம்புகிறது. ஆரம்பித்த காலத்தில் இருந்து இப்போது, அறப்போர் இயக்கம் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் ஒரு தன்னார்வல இயக்கமாக உருவெடுத்துள்ளது. அறப்போர் இது வரை பெரும்பாலும் சென்னையில், ஊழல் ஒழிப்பு, நீர்நிலைகள் பாதுகாப்பு குடி மக்கள் உரிமைகள் பற்றி பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், வார்டுவாரியாக பிரச்சனைகள் தீர்வு காண போராடி வருகிறது.
தற்போது சென்னையை தாண்டி கோவை மாவட்டத்திலும் அறப்போர் இயக்கம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதனுடைய அடுத்த முயற்சியாக திருச்சியில் அறப்போர் இயக்கம் தங்களுடைய சமூக பணிகளை தொடர்ந்து செய்ய உள்ளனர். அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் கூறுகையில்,அறப்போர் திருச்சி துவக்க நிகழ்வு வருகிற ஏப்ரல் மாதம் 10ந் தேதி அன்று திருச்சி மினி ஹாலில் மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது. திருச்சியில் இயக்கம் செயல்பட தொடங்குவதற்கு முன்பே அதற்கான சமூக பணியில் ஈடுபட தொடங்கியுள்ளோம். மன்னார்புரம் முதல் அண்ணா விளையாட்டு அரங்கம் வரை புதிய சாலை அமைத்து இருந்தனர். ஆனால் அந்த சாலையில் பழைய சிலையை அகற்றாமல் மிக அதிக உயரத்தில் புதிய சாலை அமைத்தது எதிர்த்து எங்கள் அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரின் பேரில் புதிய மற்றும் பழைய சாலைகள் இரண்டும் அகற்றப்பட்டது.
எங்களுடைய முதல் வெற்றியாகும். மேலும் திருச்சி மாவட்ட அறப்போர் குழுவில் தன்னார்வலராக இணைய கீழ்கண்ட லிங்கை https://arappor.org/volunteer.php பயன்படுத்தி குழுவில் இணைந்துக் கொள்ளலாம். திருச்சி மாவட்டத்தில் ஊழலை ஒழிக்க நீதியும் சமத்துவமும் உள்ள சமூகத்தை உருவாக்கிட நடவடிக்கை மேற்கொள்வோம் என்றார்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO