மக்களின் பாதுகாப்பு மற்றும் விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டு பள்ளிகள் திறப்பது முடிவு செய்யப்படும் - திருச்சியில் பள்ளிக்கல்விதுறை அமைச்சர் பேட்டி 

மக்களின் பாதுகாப்பு மற்றும் விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டு பள்ளிகள் திறப்பது முடிவு செய்யப்படும் - திருச்சியில் பள்ளிக்கல்விதுறை அமைச்சர் பேட்டி 

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பெல் நிறுவன சமுதாயக் கூடத்தில் நடந்த அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் 88 பயணாளிகளுக்கு ரூ.35 லட்சம் மதிப்பிலான நலதிட்ட உதவிகளை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

இவ்விழாவிற்கு திருச்சி மாவட்ட சிவராசு தலைமை வகித்தார். பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது... ஆரம்பப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி திறப்பது குறித்து கேட்டதற்கு, கொரோனா ஊரடங்கு நீடிப்பது குறித்து ஆலோசனை கூட்டம் மாத கடைசில் நடக்கும் பொழுது இது குறித்து ஆலோசனை நடத்தப்படும் அப்பொழுது மருத்துவ வல்லுநர்களிடும் கலந்து ஆலோசிக்கபடும் அதன்பிறகு தெரியவரும் என்றார்.

பள்ளி திறப்பு குறித்து உங்களது பரிந்துரை எப்படி அளித்துள்ளீர்கள் என்று கேட்டதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் வழங்கப்பட்ட பரிந்துரையை சில ஆரம்ப பள்ளியில் இருந்து திறக்கலாம் என்றும், சிலர் நடுநிலைப்பள்ளிகள் மட்டும் திறக்கலாம் என்றும் கூறுகின்றனர். இப்படி வேறுபாடுகள் ஒவ்வொன்றிலும் உள்ளது. எது எப்படி இருந்தாலும் மக்களின் பாதுகாப்பு மற்றும் மக்களின் விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டு பள்ளிகள் திறப்பது முடிவு செய்யப்படும் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn