மாநகரில் பல்வேறு புதிய திட்டங்களை திறந்து வைத்த அமைச்சர்

மாநகரில் பல்வேறு புதிய திட்டங்களை திறந்து வைத்த அமைச்சர்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட கிராப்பட்டி அரசு காலனியில் 20.80 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தை இன்று (08.02.2024) நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே. என்.நேரு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் மா பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் மரு. இரா. வைத்திநாதன், நகர பொறியாளர் பி.சிவபாதம், முக்கிய பிரமுகர் வைரமணி, மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள்,அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட RMS காலனியில் மாநகராட்சி பொதுநிதி திட்டத்தின் கீழ் ரூபாய் 24 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா மற்றும் திறந்த வெளி உடற்பயிற்சி கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். 

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட கிராபட்டி காந்தி நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூபாய் 11.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலைக்கடையினை இன்று (08.02.2024 அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு பொருட்களை வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் மரு. இரா. வைத்திநாதன், நகர பொறியாளர் பி.சிவபாதம், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள்,அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision