100 சதவீத நூலக வாசகர்களைக் கொண்ட தென்னூர் சுப்பையா நடுநிலைப்பள்ளி
திருச்சி புத்தூர் கிளை நூலகத்தில் தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளிமாணவர்கள்நூறு சதவீத நூலக வாசகர்களாக சேரும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
திருச்சி தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தன் வரவேற்றார்.
தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை திருச்சிபுத்தூர் கிளை நூலகர் புகழேந்தி திருச்சி நகர சரக வட்டார கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணியிடம் உறுப்பினர் இரசீதினைவழங்கினார்.
புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டத் தலைவர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார்.
திருச்சி நகர சரக வட்டார கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணி பேசுகையில்,பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் படிக்கும் பழக்கத்தினை ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும்.அவ்வகையில் நூறு சதவீத நூலக வாசகர்களை கொண்டதிருச்சி தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளிசெயல் பாராட்டிற்குரியது.
நூலகம் தகவல், எழுத்தறிவு, கல்வி மற்றும் கலாச்சார கருப்பொருளை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.பள்ளி என்பது பாடநூல்களைக் கொண்டு அறிவை விதைக்கும் களம் ஆகும். நூலகமோ அந்த அறிவை செம்மைப்படுத்தும் மற்றொரு களமாகும். பள்ளியும் நூலகமும் இணைபிரியாதவை ஆகும்.
குழந்தைகளுக்கு இளம் பருவத்திலேயே வாசிக்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை படித்த புத்தகத்தை திறனாய்வு செய்ய வேண்டும். அந்த மாணவர்களை மாவட்டம், மாநில அளவில் தேர்வு செய்து பரிசு வழங்கி கௌரவிக்கப் படுவார்கள். மேலும் புத்தக செயலியை பயன்படுத்தி புத்தகத்தை வாசிக்க வேண்டும். வாசிப்பை நேசிக்க வேண்டும். கருத்துக்களை மாணவர்கள் பேசிக்க வேண்டும் என்றார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO