உடற்கல்வி மற்றும் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

உடற்கல்வி மற்றும் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

பாரதிதாசன் பல்கலைக்கழம் சமுகப்பணித்துறை முதுகலைப்பட்ட முதலாம் ஆண்டு மாணவர்கள் நடத்திய உடற்கல்வி மற்றும் விளையாட்டின் முக்கியதுவம் பற்றிய விழிப்புணர்வு திருச்சி காட்டூர் கைலாஷ் நகர் சோலா இறகுபந்து அக்காடமியில் நடைபெற்றது.

இதில் சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் ஆண்கள் மற்றும் பென்கள் என தனித்தனி பிரிவில் இறகுபந்து போட்டிகள் நடைபெற்றது.

இதில் பல வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் குறிப்பாக (குழந்தைபருவ) கலந்துகொன்டனர். இதில் சிிறப்பு விருந்தினராக தஞ்சை Dr.ரமேஷ் குமார் இந்திய கூடைபந்து நடுவர் மற்றும் Dr.ராஜவேல் பாரதிதாசன் பல்கலைக்கழம் சமுகபணித்துறை துனை பேராசிரியர் கலந்து காெண்டு உடற்கல்வி மற்றும் விளையட்டு முக்கியதுவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

விளையாட்டில் ஈடுபடுபவரை நாம் ஊக்குவிக்க வேண்டும். தனிநபர் மற்றும் குழு விளையாட்டுகளில் பங்கேற்பதால் சகிப்புத் தன்மை, தலைமைப் பண்பு, ஒற்றுமை உணர்வு, விட்டுக்காெடுக்கும் மனப்பான்மை, தேசபற்று பாேன்ற சிறந்த குணநலன்களையும் பெறமுடியும் என கூறினார்கள்.

 சமுக பணித்துறை மாணவ மாணவிகள் பி. காளிதாசன், ஜெயக்குமாா், கவிராஜன், ஜெயலட்சுமி, கேஷியா ஆகியேர்களை வாழ்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO