திருச்சி அரசு மருத்துவமனையின் லேப் டெக்னீசியன் வீட்டின் பூட்டை உடைத்து 27 பவுன் நகை கொள்ளை

திருச்சி அரசு மருத்துவமனையின் லேப் டெக்னீசியன் வீட்டின் பூட்டை உடைத்து 27 பவுன் நகை கொள்ளை

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் கைலாஷ் நகர் அண்ணா சாலை மூன்றாவது தெருவை சேர்ந்தவர் வெண்ணிலா. இவர் திருச்சி அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீசியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்றுகாலை அவர் தனது வீட்டினை வழக்கம் போல் பூட்டிவிட்டு பணிக்கு சென்றுள்ளார். பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 27பவுன் நகை மற்றும் ரூ.25ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து வெண்ணிலா திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் தடயவியல் நிபுணர்கள், மோப்பநாய் லீலி வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த இடத்தில் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம் அரங்கேறி இருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பகுதியில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சிசிடிவி கேமராவை உடைத்து, சுமார் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் சிலிண்டர்கள், வீட்டுகளில் இருந்த அரிசி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO