உலக சுற்றுச்சூழல் தினம் - மரக்கன்றுகளை நட்ட வனத்துறை

உலக சுற்றுச்சூழல் தினம் -  மரக்கன்றுகளை நட்ட வனத்துறை

உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கும் பொருட்டு தமிழக வனத்துறை அதிகாரி முருகன் மற்றும் வன அலுவலர்கள் சரண்யா, கஸ்தூரிபாய், பிரிய சுருதி, சுரேஷ்குமார், குமார் ஆகியோர்கள் வருகைதந்து நம்முடன் இனைந்து நிகழ்வினை சிறப்பித்த விதம் நமக்கெல்லாம் மட்டற்ற மகிழ்ச்சி. நிகழ்ச்சியினை இ.பி காலனி சங்கத் தலைவர் விஜயராமன் தொடங்கி வைத்தார். 

செயலாளர் ச.சுந்தர் வரவேற்றுப் பேசிய பின்பு நமது சங்கத்தின் துனைத்தலைவர் க.நந்தகுமார் உரையாற்றினார். அதன்பிறகு நமது காலனியில் வசிக்கும் ச.தசரதன், மரம் வளர்ப்பது மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி உலக வரைபடத்தில் இந்தியா, சைனா, இந்தோனேஷியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் இந்த நாடுகளே உலக‌ மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகை அடர்த்தி கொண்ட நாடுகள் அதிகப்படியான சுற்றுச்சூழல் மாசுபடு அதிகரிக்காமல் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்று தெரிவித்தார்.

பிறகு சங்கத்தின் முன்னாள் செயலாளர் தர்மலிங்கம் மரம் வளர்ப்பின் அவசியம் பற்றியும் வன அலுவலர்கள் பேசிய பேச்சினை மேற்கோள் காட்டி பேசினார். அதன்பிறகு மரம் நடுவிழா நடந்தேறியது. அடுத்தபடியாக வனத்துறை அதிகாரி மற்றும் வனவர்களுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பிக்கப்பட்டது. நிறைவாக செயலர் சுந்தர் நன்றி கூற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision