வாய் இல்லாத நாயும் இல்லை... வழக்கு இல்லாத எம்பி, எம்எல்எவும் இல்லை !!

வாய் இல்லாத நாயும் இல்லை... வழக்கு இல்லாத எம்பி, எம்எல்எவும் இல்லை !!

நாட்டில் 107 எம்பி, எம்எல்ஏக்கள் மீது வெறுப்பு பேச்சு வழக்கு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் உள்ள 4,768 எம்.பி, எம்எல்ஏக்கள் தாக்கல்செய்த பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்து, அவர்களில் எத்தனைபேர் மீது வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்குகள் உள்ளன என்பதை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. 


அதன்படி 4,768எம்பி., எம்எல்ஏக்களில் 107 எம்.பி., எம்எல்ஏக்கள் மீது வெறுப்பு பேச்சு வழக்கு உள்ளது. பாஜக எம்.பி., எம்.எல்ஏக்களில் 42 பேர் மீதும், வெறுப்பு பேச்சு வழக்கு உள்ளது. காங்கிரசில் 15 பேர் மீதும், ஆம் ஆத்மியில் 7 பேர் மீதும், சமாஜ்வாடி மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரசில் தலா 5 பேர் மீதும், ஆர்ஜேடியில் 4 பேர் மீதும் இந்த வழக்கு உள்ளது.

எம்பிக்களில் அமித்ஷா, பிரகலாத் ஜோஷி, கிரி ராஜ்சிங், ஷோபா கரன்லாஜே, நித்யானந்த் ராய், திலிப் கோஷ், பிரக்யா தாக்குர், நிஷிகாந்த் துபே, அனந்த்கு மார் ஹெக்டே, ஒவைசி, பத்ருதீன் அஜ்மல், சசி தரூர், கனிமொழி, சஞ்சய் ராவத், ராகவ் சதா, வைகோ உள்ளிட்டோர் மீது வெறுப்பு பேச்சு வழக்கு இருக்கிறது.

எம்எல்ஏக்களில் தமிழக முதல்வர் ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வியாதவ் உள்ளிட்டோர் வெறுப்பு பேச்சு வழக்கு உள்ளவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். எம்பிக்களில் உத்தரபிரதேசத்தில் அதிகபட்சம் 7 பேர், தமிழகத்தில் 4 பேர் வெறுப்பு பேச்சு வழக்கில் சிக்கியுள்ளனர்.

எம்எல்ஏக்களில் அசாமிலும், தமிழகத்திலும் தலா 5 பேர் மீதும், டில்லி, குஜராத், மேற்கு வங்கத்தில் தலா 4 பேர் மீதும் வெறுப்பு பேச்சு வழக்கு இருக்கிறது. எதற்காக வாய் திறக்கிறார்களோ இல்லையோ போண்டா சாப்பிடவும், வெறுப்பு பேச்சு பேசவும் நல்லா திறக்கிறார்கள் வாயை.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision