அறிவுசார் மையத்தில் பயின்று அரசு தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மேயரிடம் வாழ்த்து

அறிவுசார் மையத்தில் பயின்று அரசு தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மேயரிடம் வாழ்த்து

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அறிவு சார் மையத்தில் 2024 ஆம் ஆண்டு பயின்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வில் நான்கு பேர் வெற்றி பெற்று மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் அவர்களிடம் வாழ்த்து பெற்றனர்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பாலக்கரை மற்றும் குதுப்பாப்பள்ளம் பகுதியில் அமைந்துள்ள அறிவுசார் மையம் சார்பாக UPSC மற்றும் TNPSC உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி சென்னை அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி மூலமாக காணொளி காட்சி வாயிலாக இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.இந்த இரு அறிவிச்சார் மையங்களிலும் தினந்தோறும் 200க்கும் மேற்பட்ட மாணவ ,மாணவிகள் பயின்று வருகிறார்கள் பாலக்கரை அருவுசார் மையத்தில்

பயின்ற தா .பிரவீன் குமார் , சு. அட்சயா பொது சுகாதாரத்துறை, ஜி. கீர்த்தனா நீதித்துறை, கீர்த்தி லட்சுமி ஊரக வளர்ச்சித்துறை ஆகிய நான்கு நபர்களும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வில் வெற்றி இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வு பெற்றுள்ளார்கள் மாண்புமிகு மேயர் மு.அன்பழகன் அவர்கள் , ஆணையர் திரு.வே. சரவணன் இ.ஆ.ப., ஆகியோர் அரசு தேர்வில் வெற்றி மாணவ, மாணவியர்களுக்கு புத்தகம் மற்றும் மை போன வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கள்.

இந்த நிகழ்வில் துணை மேயர் திருமதி. ஜி. திவ்யா, மண்டல தலைவர்கள் திருமதி. துர்கா தேவி, திருமதி. விஜயலட்சுமி கண்ணன்,மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision