பேருந்து நிறுத்தம் அருகே கழிப்பறை - நோய் தொற்று பரவும் அபாயம்

பேருந்து நிறுத்தம் அருகே கழிப்பறை - நோய் தொற்று பரவும் அபாயம்

திருச்சி அரசு மருத்துவமனை அருகில் நவீன கழிப்பறை  உள்ளது. அதாவது வயலூர் சீனிவாசநகர் சோமரசம்பெட்டை செல்லும் பயணிகள் பேருந்து நிறுத்தம் அருகில்  அமைக்கப்பட்டுள்ளது.அப்பேருந்து நிலையத்தில் பேருந்துகள் அனைத்தும் நிழற்குடை அருகில் நிற்காமல் முன்னதாகவே நிறுத்தப்படுவதால் பயணிகள் அந்த கழிவறை முன்பே நிற்கும் சூழல் ஏற்படுகிறது

அந்த இடத்தில்  காலை வேளையில் பொதுமக்கள் கூடும் இடத்தில் தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதால் பேருந்துகளை  பேருந்து நிழல் குடையில் அருகே நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision