திருச்சி பிஷப் ஹீபர் கல்லுாரி தமிழ்த்துறை பேராசிரியர் மீது மாணவிகள் பாலியல் புகார் - கைது நீதிமன்றத்தில் ஆஜர் சிறையிலடைப்பு
திருச்சி, புத்தூர் பிஷப் ஹீபர் கல்லுாரியின் தமிழ்த்துறையில் பட்டமேற்படிப்பு படித்த சில மாணவிகள், தமிழ்த் துறை தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி, 5 பக்க அளவிலான புகார் மனுவை கல்லுாரி முதல்வருக்கு அனுப்பியுள்ளனர்.
அதில், வகுப்பறையில், மிக நெருக்கமாக அமர்ந்து கொண்டு இரட்டை அர்த்தம் வரும்படி கொச்சையாக பேசுவது போன்ற பல்வேறு பாலியல் சீண்டல்கள் ஈடுபட்டார். உச்சகட்டமாக அவர் செய்த சேட்டைகளை பார்த்து, தலையை குனிந்து கொண்டே வகுப்பறையில் இருந்தோம்’ என்று தெரிவித்துள்ளனர்.மேலும், வகுப்பறையில் குறைந்தளவு மாணவிகள் இருந்தால், தன் அறைக்கு வரச்சொல்லி, கட்டாயப் படுத்து கிறார்.
அதே துறையில் உதவி பேராசிரியராக பணிபுரியும் பெண் ஒருவர், `எச்ஓடியை பார்க்க போகும் போது, முகம் கழுவி மேக்கப் போட்டுக் கொண்டு தான் போக வேண்டும்’ என வலியுறுத்துகிறார்.
இதனால், கல்லுாரியிலிருந்து வெளியேற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில், வக்கீல் ஜெயந்திராணி தலைமையிலான குழுவினர், தமிழ்த்துறை தலைவர் பால் சந்திரமோகன், உதவி பேராசிரியர் நளினி உள்ளிட்டோரிடம் விசாரணை செய்து அதன் அறிக்கையை, கல்லுாரி முதல்வரிடம் தாக்கல் செய்துள்ளனர். தற்போது, மாணவிகளின் புகார் குறித்து போலீஸ் தரப்பிலும் விசாரணையை துவங்கினர்.
இதுகுறித்து கல்லூரி முதல்வரிடம் கேட்டபோது மாணவிகளிடம் இருந்து வரப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு பால் சந்திரமோகனை கல்லூரியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார் .மேலும் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவின் பேரில் ஒரு வாரகாலம் சமூகநலத்துறை அலுவலர் தமூம்னிசா தலைமையில் விசாரணை நடைபெற்றது. பேராசிரியர் பால் சந்திரமோகன் இடமும் கல்லூரி மாணவிகளிரிடமும் விசாரணை நடைபெற்று நடத்தி அறிக்கையை தாக்கல் செய்தார் .அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் பால் சந்திரமோகன் கைது செய்துள்ளனர்.
பால் சந்திரமோகன் மீது ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் இந்திய தண்டனை சட்டம் 294 (b), 354 (A) (D), 509, 109 மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட ஐந்து சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பால் சந்திரமோகனை கைது செய்த ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி மணிவாசகன் முன் ஆஜர்படுத்தினர். வருகிற 23.07.2021 வரை கரூர் கிளைசிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm