திருச்சி விரிவாக்கம் - கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகள் தெரிவிக்கலாம்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் 4,404 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. அதில் தற்போதுள்ள 281.14 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடன் உள்ள உள்ளுர் திட்டப்பகுதியினை 804.55 சதுர கிலோமீட்டர் பரப்பளவாக விரிவாக்கம் செய்து போக்குவரத்து, சுற்றுசூழல் மற்றும் நீர்வள உள்கட்டமைப்பு, பொருளாதாரம் மற்றும் உத்தேச நிலஉபயோக
விபரங்களுடன் கூடிய உத்தேச முழுமைத் திட்ட வரைவு திருச்சிராப்பள்ளி மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தால் தயார் செய்யப்பட்டு அரசாணை எண்.13, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி (நவ-4(2)) துறை, நாள்.(13.01.2024) அன்று அரசால் இணக்கமளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து (07.02.2024) அன்று தமிழ்நாடு அரசிதழில் பிரசுரம் செய்யப்பட்டு அதிலிருந்து 60 நாட்கள் வரை இத்திட்ட வரைவின் மீதான பொதுமக்களின் கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகள் பெறப்படவுள்ளது.
இத்திட்டம் குறித்த முழு விபரங்களை பார்வையிடவும் அது குறித்த கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளை எளிதில் தெரிவிப்பதற்காகவும் www.trichymasterplan.com என்ற இணையதள முகவரி உருவாக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் தங்கள் கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளை மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம், திருச்சிராப்பள்ளி மாவட்டம், காஜாமலை மெயின் ரோடு, காஜாமலை, திருச்சிராப்பள்ளி - 620023 என்ற முகவரியில்
கடிதம் வாயிலாகவோ, masterplantrichy@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது மேற்குறிப்பிட்டுள்ள இணையதளப் பக்கத்தில் உள்ள படிவம் வாயிலாகவோ தெரிவிக்கலாம் என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision