திருச்சி மலையடிபட்டி ஜல்லிக்கட்டு போட்டி  - 28 பேர் காயம்

திருச்சி மலையடிபட்டி ஜல்லிக்கட்டு போட்டி  - 28 பேர் காயம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மலையடிபட்டி யில் புனித சவேரியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நேற்று  காலை 9.30 மணி அளவில் நடைபெற்றது. இப்போட்டியை ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் செல்வராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்போட்டியில் 574 காளைகள், 250 காளையர்கள் களம் காண்டனர்.

இந்த போட்டியின் முடிவில் மாடுபிடி  வீரர்கள் 12 பேர், மாட்டின் உரிமையாளர் 12 பேர், பார்வையாளர் 3 பேர், போட்டி ஒருங்கிணைப்பாளர் ஒருவர் என மொத்தம் 28 பேர் காயமடைந்தனர். மணப்பாறை சுற்றுவட்டார பகுதி மற்றும் அருகாமையில் உள்ள மாவட்டங்களில் இருந்து வந்துள்ள 574-க்கு மேற்பட்ட காளைகளும், 250-க்கு மேற்பட்ட காளையர்களும் களம் கண்டனர். போட்டியின் துவக்கத்தில் ஊர் காளைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு புனித நீர் தெளிக்கப்பட்டது.

பின் வாடிவாசலில் அவிழ்க்கப்பட்டதையடுத்து, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டத்திலிருந்து வந்துள்ள காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசல் வழியே அவிழ்க்கப்பட்டன. ஒரு தொகுப்புக்கு 25 காளையர்கள் வீதம் 10 சுற்றுகள் நடைபெற்றன. வாடிவாசல் வழியே திமிறி சீறிப்பாய்ந்த காளைகள் காளையர்களை கலங்கடித்த நிலையில் நின்று விளையாடியது. சில காளையர்கள் தொட்டு கூட பார்க்க முடியாதபடி சீறிபாய்ந்தது. இருப்பினும் சில காளைகளை வீரர்கள் திமில் பிடித்து தழுவினர்.

காளைகளை பிடித்த வீரர்களுக்கு ரொக்கப் பணம், கட்டில், மின் விசிறி, குக்கர், சில்வர் குடம்,அண்டா, உள்ளிட்டவையும் வெற்றி பெற்ற காளைகளுக்கும், வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியின் பாதுகாப்பு பணியில் கரூர் ADSP கண்ணன் தலைமையிலான 197 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn