திருச்சி நாகநாதசுவாமி கோவில் தேரோட்டம் - பெருந்திரளான பக்தர்கள் தேரை இழுத்தனர்

திருச்சி மலைக்கோட்டை பகுதியில் எழுந்தருளியுள்ள மலைக்கோயிலுக்கு வடக்கில் உள்ளதும், உமாதேவியர் தீர்த்தமாடி பூஜித்து வழிபட ஆகாய கங்கையே சிவகங்கையாகியதை தன்னகத்தை கொண்டதும், நாககன்னியர் எழுவரால் நாகலோகத்து முட்செவந்தி மலரால் பூஜிக்கப்பட்ட சாரமா முனிவரால் தொண்டு செய்யப்பட்டதுமாகிய ஆனந்தவல்லி உடனுறை நாகநாதசுவாமி திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இக்கோவிலின் மாசிமகத் திருவிழாவானது கடந்த 2ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய அம்பாளும், நாகநாதசுவாமியும் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளியும் வீதி உலா நடைபெற்றுவந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான மாசி மகத் தேரோட்டம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது,
மீனலக்னத்தில் நாகநாதசுவாமி, அம்பாளுடன் அலங்கரிக்கப்பட்ட முதல் திருத்தேரில் எழுந்தருள, மற்றொரு தேரில் ஆனந்தவல்லி தாயார் மற்றும் சிறிய தேரில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷமிட்டவாறு தேரைவடம்பிடித்து இழுத்துச் சென்றனர். தேர் வீதிகளின் வழியாக வலம் வந்து பின்னர் சன்னதிக்குச் சென்றடைந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் சுவாமி மற்றும் அம்பாளை தரிசனம் கண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision