திருச்சி மக்களின் நாளை (23.05.2023) புதிய ரூட் - மாநகர காவல் ஆணையர் அறிவிப்பு
திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்திய பிரியா, திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல் பெருமளவில் பொதுமக்கள் கூடும் விழாக்களுக்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து அசம்பாவிதம் நடைபெறாமலும், பொதுமக்களுக்கு எந்த அசௌகரியமும் ஏற்படாமல் கண்காணித்துக்கொள்ள வேண்டுமென மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
அதன்படி நாளை (23.05.2023)-ந் தேதியன்று பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1348வது சதய விழாவை முன்னிட்டு திருச்சி மாநகர ஒத்தக்கடை சந்திப்பில் அமைந்துள்ளது பேரரசர் முத்தரையர் திருவுறுவச்சிலைக்கு அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மாலையணிவித்து மரியாதை செய்ய உள்ளார்கள். இவ்விழாவில் திருச்சி மாநகர் மற்றும் திருச்சி மாவட்டத்தை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து பெரும்திரளான மக்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்.
இவ்விழாவை முன்னிட்டு, திருச்சி மாநகர காவல்துறை சார்பாக சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், போக்குவரத்திற்கும் பொதுமக்களும் இடையூறின்றி விழா நடைபெற விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது தவிர 14 ரோந்து வாகனங்கள், 3 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் விழிப்புடன் ரோந்து பணி மேற்க்கொள்ள வேண்டுமெனவும், 9 சோதனை சாவடிகளில் போதுமான காவலர்கள் பணியிலிருந்து விழிப்புடன் பணிபுரியவும் மற்றும் முக்கிய போக்குவரத்து சந்திப்புகளில் சீரான போக்குவரத்தை உறுதி செய்யும் பொருட்டு
2 காவல் உதவி ஆணையர்கள் மேற்பார்வையில் 14 போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் 177 ஆளினர்கள் முக்கிய சந்திப்புகள் மற்றும் பிரதான சாலைகளில் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். 72 இடங்களில் போக்குவரத்து பணி செய்ய இதற்காக திருச்சி மாநகரம் முழுவதும் திருச்சி மாநகர காவல் ஆணையர் தலைமையில், 3 காவல் துணை ஆணையர்கள், 12 காவல் உதவி ஆணையர்கள், 41 காவல் ஆய்வாளர்கள் உட்பட 1500 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் திரட்டப்பட்டு, 24 மணிநேரமும் கண்காணிக்க சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.
நாளை (23.05.2023) பெரும்பிடுகு முத்தரையர் பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி ஒத்தக்கடை சாலை சந்திப்பில் உள்ள பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் திருவுருவ சிலைக்கு பல்வேறு அமைப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளதால் ஒத்தக்கடை வழியாக செல்லும் கீழ்கண்ட பேருந்துகளின் வழித்தடங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
(01). காவல் சோதனைச் சாவடி-1 வழியாக முத்தரையர் சிலைக்கு மரியாதை செலுத்த வருபவர்கள் கருமண்டபம், மிளகுபாறை, மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, வெஸ்ட்ரி, KRT பெட்ரோல் பங்க், காவல் கட்டுப்பாட்டறை சந்திப்பு வழியாக பென்வெல்ஸ் சாலையில் வாகனங்களை நிறுத்தி விட்டு வரவேண்டும்.
(02). காவல் சோதனைச் சாவடி-2 வழியாக முத்தரையர் சிலைக்கு மரியாதை செலுத்த வருபவர்கள் மன்னார்புரம் மேம்பாலம், E.B.Office சர்வீஸ் சாலையில் இறங்கி, டி.வி.எஸ்.டோல்கேட், தலைமை தபால் நிலையம் வழியாக வந்து பறவைகள் சாலையில் (Birds Road) வாகனங்களை நிறுத்தி விட்டு வரவேண்டும்.
(03). காவல் சோதனைச் சாவடி-3 வழியாக முத்தரையர் சிலைக்கு மரியாதை செலுத்த வருபவர்கள் டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் நிலையம் வழியாக வந்து பறவைகள் சாலையில் (Birds Road) வாகனங்களை நிறுத்தி விட்டு வரவேண்டும்.
(04). காவல் சோதனைச் சாவடி-4 வழியாக முத்தரையர் சிலைக்கு மரியாதை செலுத்த வருபவர்கள் பால்பண்ணை, ஜி-கார்னர், டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் நிலையம் வழியாக வந்து பறவைகள் சாலையில் (Birds Road) வாகனங்களை நிறுத்தி விட்டு வரவேண்டும்.
(05). காவல் சோதனைச் சாவடிகள்-5 மற்றும் 6 வழியாக முத்தரையர் சிலைக்கு மரியாதை செலுத்த வருபவர்கள் சஞ்சீவி நகர் சந்திப்பு, பால்பண்ணை, ஜி-கார்னர், டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் நிலையம் வழியாக வந்து பறவைகள் சாலையில் (Birds Road) வாகனங்களை நிறுத்தி விட்டு வரவேண்டும்.
(06). காவல் சோதனைச் சாவடி-7 வழியாக முத்தரையர் சிலைக்கு மரியாதை செலுத்த வருபவர்கள் கரூர் பைபாஸ் சந்திப்பு, கே.டி.ஜங்சன், சாஸ்திரி ரோடு, மகாத்மா காந்தி பள்ளி சந்திப்பு, உழவர் சந்தை சாலை சந்திப்பு, MGR சிலை சந்திப்பு, நீதிமன்ற சாலை சந்திப்பு வழியாக வந்து அகில இந்திய வானொலி நிலையத்தின் அருகில் உள்ள குறுக்குச் சாலையில் வாகனங்களை நிறுத்தி விட்டு வரவேண்டும்.
(07). காவல் சோதனைச் சாவடி-8 வழியாக முத்தரையர் சிலைக்கு மரியாதை செலுத்த வருபவர்கள் புத்தூர் நான்கு ரோடு, MGR சிலை சந்திப்பு, நீதிமன்ற சாலை சந்திப்பு வழியாக வந்து அகில இந்திய வானொலி நிலையத்தின் அருகில் உள்ள குறுக்குச் சாலையில் வாகனங்களை நிறுத்தி விட்டு வரவேண்டும்.
(08). காவல் சோதனைச் சாவடி-9 வழியாக முத்தரையர் சிலைக்கு மரியாதை செலுத்த வருபவர்கள் குழுமணி ரோடு, நாச்சியார் கோயில் சந்திப்பு, புத்தூர் நான்கு ரோடு, MGR சிலை சந்திப்பு, நீதிமன்ற சாலை சந்திப்பு வழியாக வந்து அகில இந்திய வானொலி நிலையத்தின் அருகில் உள்ள குறுக்குச் சாலையில் வாகனங்களை நிறுத்தி விட்டு வரவேண்டும்.
((குறிப்பு : முத்தரையர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர், வாகனங்களில் வந்தவர்கள் வந்த வழித்தடங்கள் வழியாகவே திரும்பிச் செல்லவேண்டும்.))
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn