திருச்சி வெங்கடேச பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம்

திருச்சி வெங்கடேச பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம்

திருச்சி மணிகண்டம் கிராமத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடரமண பெருமாள் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.

திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் மணிகண்டம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வெங்கடரமன பெருமாள் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த திருக்கோவிலுக்கு மணிகண்டம் கிராமம் மட்டுமல்லாமல் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வழிபட்டு செல்வது வழக்கம். தமிழக இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான இந்த ஆலயத்தில் பல்வேறு திருவிழாக்களும் வைபவங்களும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சீதேவி பூதேவி சமேத வெங்கடரமண பெருமாள் ஆலயத்திற்கு கும்பாபிஷேகம் செய்வதாக ஊர் பெரியோர்களால் முடிவு செய்து கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பாலாலையம் செய்யப்பட்டது. கோவில் கருவரை கோபுரம் மற்றும் கொடிக்கம்பம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் புனரமைப்பு பணிகள் நடைபெற்ற நிலையில் இன்று காலை 10 மணி அளவில் பூச நட்சத்திரத்தில் கும்பாபிஷம் வெலு விமர்சையாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் மணிகண்டம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் என நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என்கிற விண்ணத்திர முழக்கம் முழங்க கோபுர தரிசனம் மேற்கொண்டனர்.

ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடரமன பெருமாளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்ற உடன் போல் ஆலயத்தின் வலது புறம் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட ஆஞ்சநேயர் சிலைக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது - வானுயர காட்சி தரும் ஆஞ்சநேயரை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் வணங்கி மகிழ்ந்தனர். நிகழ்வில் உபயதாரர் சிவராம முருகன் ,இந்து சமய அறநிலை துறை சார்பாக சிறப்பு விருந்தினராக மண்டல இணை ஆணையர் பிரகாஷ் உதவி ஆணையர் லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision