திருச்சி மாநகரில் இரண்டு கடைக்கு சீல் - ஒருவர் காவல்துறையிடம் ஒப்படைப்பு

திருச்சி மாநகரில் இரண்டு கடைக்கு சீல் - ஒருவர் காவல்துறையிடம் ஒப்படைப்பு

திருச்சி கல்லுக்குழி மற்றும் காஜாபேட்டை பகுதியில் ஆகிய இரண்டு கடைகளும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்து வந்த நிலையில் உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் லால்வேனா, அவசர தடையாணை உத்தரவின் படி திருச்சிராப்பள்ளி மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவால் அந்த இரண்டு கடைகளும் சீல் செய்யப்பட்டு புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், கல்லுக்குழி பகுதியில் உள்ள கடையின் உரிமையாளர் தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்த காரணத்தினால் அவரும், அவரது இரு சக்கர வாகனமும் மேல்நடவடிக்கைக்காக காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். வழக்கு போடுவதற்காக இரண்டு சட்டப்பூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும், மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். R.ரமேஷ்பாபு கூறுகையில்...... திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து, தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, அந்த கடை சீல் செய்யப்படும் என்று கூறினார். இந்த நிகழ்வில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இது போன்று பொதுமக்களும் உணவு சம்பந்தமான கலப்படங்கள் மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட உணவு பொருட்களை தாங்கள் உணவு பொருள் வாங்கும் கடைகளில் கண்டறியப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களுக்கு புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார்.

புகார் எண் : 99 44 95 95 95 / 95 85 95 95 95 

மாநில புகார் எண் : 9444042322

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision