கனரக லாரி சக்கரத்தில் சிக்கி தந்தை, மகன், மகள் பலி

Sep 22, 2023 - 20:38
Sep 22, 2023 - 20:41
 4502
கனரக லாரி சக்கரத்தில் சிக்கி தந்தை, மகன், மகள் பலி

திருச்சியில் இருந்து கம்பி ஏற்றி கொண்டு கர்நாடகா நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலை ஜீயபுரம் பகுதி அல்லூர் அருகே சென்று கொண்டிருந்த போது திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை வைகோ நகரை சேர்ந்த மூர்த்தி (41) அவரது மகள் தர்ஷினி, மகன் குருசரண் ஆகிய மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் சென்றனர்.

அப்போது கனரக லாரியை மூர்த்தி முந்தி சென்ற போது விபத்து ஏற்பட்டது. இதில் தந்தை, மகன், மகள் மூன்று பேரும் கனரக லாரி டயரில் சிக்கி சம்பவ இடத்தில் பலியாகினர். இதைப்பற்றி தகவலறிந்து வந்த ஜீயபுரம் போலீசார் உடலை மீட்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலை விபத்தில் தந்தை மகன் மகள் மூன்று பேரும் கொடூரமாக உயிரிழந்தது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision