பெண்களின் கவனத்தை திசை திருப்பி செயின் திருட்டில் ஈடுபட்ட இரு பெண்கள் கைது - ரூ.10 லட்சம் மதிப்புள்ள 22 பவுன் தங்க நகைகள் பறிமுதல்
திருச்சி மாநகரம் சத்திரம் பேருந்து நிலைய பகுதிகளில் பெண்களிடம் கவனத்தை திசை திருப்பி அவர்களது தங்க ஆபரணங்களை திருடும் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் திருடர்களை பிடிக்க திருச்சி மாநகர காவல் துறை சார்பில் காவல் துணை ஆணையர் (குற்றம் மற்றும் போக்குவரத்து) சு.முத்தரசு தலைமையில் கோட்டை குற்றப்பிரிவு ஆய்வாளர் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் 11.08.2021-ந் தேதி மாலை 04.00 மணிக்கு அண்ணாசிலை பேருந்து நிறுத்தம் அருகில் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரிடம் அவரது கவனத்தை திசை திருப்பி அவர் அணிந்திருந்த 3 ½ பவுன் தங்க செயின் திருடப்பட்டதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேற்படி தனிப்படையினர் துரிதமாக செயல்பட்டு புகார்தாரர் கொடுத்த தகவலின் அடிப்படையில் பெண் எதிரிகள் ஆந்திர மாநிலம், சித்தூரைச் சேர்ந்த அசோகன் மனைவி சுலோச்சனாஇ
(29) மற்றும் சிரஞ்சீவி மனைவி ரேகா (33) ஆகிய இருவரையும் கைது செய்தனர்
அவர்களை விசாரணை செய்ததில் தாங்கள் இருவரும் மேற்படி குற்றச்செயலை செய்ததை ஒத்துக்கொண்டு, மேலும் தாங்கள் கடந்த 21.12.2020-ம்தேதி சத்திரம் பேருந்து
நிலையத்தில் தனியாக நின்று கொண்டிருந்த 50 வயது மதிக்கத்தக்க பெண்மணியிடம் 4 ¾ பவுன் தங்க செயினையும், 26.01.2021-ம்தேதி சத்திரம் பேருந்து நிலையத்தில் நின்று
கொண்டிருந்த 47 வயது மதிக்கத்தக்க பெண்மணியிடம் 4 பவுன் எடையுள்ள இரு
செயின்கள், 1 பவுன் மோதிரம் ஒன்றையும், 27.01.2021-ம்தேதி சத்திரம் பேருந்து
நிலையத்தில் நின்று கொண்டிருந்த 57 வயது மதிக்கத்தக்க பெண்மணியிடம் 3 ¾ பவுன் தங்க செயினையும், 09.07.2021-ம்தேதி N.S.B. ரோட்டில் உள்ள தனியார் நகைக்கடையில் நகை வாங்க வந்த வயதான தம்பதியினரின் கவனத்தை திசைதிருப்பி அவர்களிடமிருந்து
5 பவுன் தங்க செயினை திருடிச் சென்றதையும் ஒப்புக் கொண்டனர்.
இவர்களிடமிருந்து மேற்படி
திருட்டு சம்பவங்களில் திருடப்பட்ட ரூபாய் பத்து இலட்சம் (ரூ.10,00,000/-) மதிப்புள்ள
22 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு எதிரிகள் இருவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேற்படி திருட்டில் ஈடுபட்ட இரு பெண் எதிரிகளை கைது செய்து அவர்களிடமிருந்து 22 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்த கோட்டை குற்றப்பிரிவு தனிப்படையினரை திருச்சி மாநகர காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn