நகர்ப்புறங்களில் திறக்கப்படாத கோயில்கள் - வாசலிலேயே வேண்டுதல் வைக்கும் பக்தர்கள்
மனிதர்கள் தங்களுடைய மன அமைதியையும் நிம்மதியையும் பகிரவும், சந்தோஷமான மற்றும் இக்கட்டான வேளைகளிலும் கடவுளை வணங்க கோவில்களை நாடி வருவார்கள். ஆனால் வாட்டி வதைக்கும் கொரோனாவுக்கு மத்தியில் வாசலிலேயே நின்று தங்களுடைய வேண்டுதல்களை செய்து வருகின்றனர்.
கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக நகர்ப்புறங்களில் கோயில்கள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.மக்கள் சார்பிலும் கோயில்கள் திறக்கப்பட வேண்டும் என பல கட்டப் போராட்டங்கள் நடத்தியும், பொதுமக்கள் ஒன்று கூடுவார்கள் என்பதால், நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாலும் கோயில்கள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.
திருச்சி மாவட்டத்திலும் நகர்ப்புற பகுதிகளில் கோயில்கள் திறக்காததால் மக்கள் கோயில்களின் வாசலிலேயே நின்று வழிபடுகின்றனர்.
திருச்சி கோர்ட் சாலையிலுள்ள உக்கிர காளியம்மன் கோவில் முன் காலை நேரத்திலும், மாலை நேரத்திலும் மக்கள் கோயில்களில் வாசலிலேயே நின்று பத்தி, சூடம் ஏற்றுவது, தெய்வத்தை வணங்குவது என தங்களுடைய வேண்டுதல்களை கோயிலின் வாசலிலேயே நின்று வழிபட்டு வருகின்றனர்.
Oct 21, 2024 1.5k
Oct 21, 2024 5.8k
Oct 21, 2024 1.5k
Oct 21, 2024 977