தேர்தலுடன் கூட்டணி உறவு முறிந்து விடாது ஆட்சிக்கு வந்த பிறகும் உறுதுணையாக இருப்போம் - கே.என்.நேரு பேச்சு

தேர்தலுடன் கூட்டணி உறவு முறிந்து விடாது ஆட்சிக்கு வந்த பிறகும்  உறுதுணையாக இருப்போம் - கே.என்.நேரு பேச்சு
திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் தி.மு.க திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி தலைமையில் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க முதன்மை செயலாளரும்,திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளருமான கே.என்.நேரு மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் சிறப்புரையாற்றிய கே.என்.நேரு......

கடந்த உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் நூறு சதவீத வெற்றி பெற்றோம்.அதற்கு கூட்டணி கட்சியினர் அனைவரின் உழைப்பும் தான் காரணம்.அந்த வெற்றிக்கு பிறகே முதன்மை செயலாளர் என்கிற பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது.தி.மு.க வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும் அப்போது எந்த பொறுப்புக்கு நான் வந்தாலும் சாதாரண தொண்டாக தான் இருப்பேன்.மக்களுக்கு எந்த வித சலுகைகள் செய்ய முடியுமோ அனைத்தையும் செய்வேன்.திருச்சி மாவட்டத்தில் அனைத்து வசதிகளும் கொண்டு வரும் வகையில் செயல்படுவேன்.

திருச்சி மாவட்டத்தில்
ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கொண்டு வருவோம்,உய்யக்கொண்டான் வாய்க்காலை முழுமையாக சீர் செய்வோம்,மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு மக்கள் எளிதாக செல்லும் வகையில் சாலை அமைக்கப்படும்,அனைத்து மக்களுக்கும் குடிநீர், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.

தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்தையும் திருச்சி மாவட்டத்திற்கு முதன்மையாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.தேர்தலுடன் இந்த கூட்டணி உறவு என்பது முறிந்து விடாது.ஆட்சிக்கு வந்த பிறகு கூட்டணி கட்சிகளின் கொள்கைகளுக்கும் அவர்களின் முன்னேற்றத்திற்கு அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு எப்பொழுதும் உறுதுணையாக இருப்போம்.

கூட்டணி கட்சிகளின் வெற்றி என்பதும் மிகவும் முக்கியமானது.அதற்கு அனைவரும் சேர்ந்து உழைக்க வேண்டும் என்றார்.இந்த கூட்டத்தில் திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் செயல்வீரர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU