திருச்சியில் களைகட்டிய ஆயுதபூஜை கொண்டாட்டங்கள்!

திருச்சியில் களைகட்டிய ஆயுதபூஜை கொண்டாட்டங்கள்!

நவராத்திரி விழாவின் இறுதி நாளில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுவது வழக்கம்.

Advertisement

அந்தவகையில் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை இன்று கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொருவரும் தங்களது தொழிலுக்கும் வாழ்க்கைக்கும் ஆதாரமாக இருக்கும் கருவிகளையும், இயந்திரங்களையும் தூய்மைப்படுத்தி வழிபாடு நடத்தினர்.

அந்த வகையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் தங்கள் கார்களை தூய்மைப்படுத்தி அதற்கு மாலையணிவித்து, தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர். பின்னர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக பட்டாசுகள் வெடித்தும், பொரிகடலை பழங்கள், பொங்கல் சுவாமிக்கு படையல் இட்டு வணங்கினர். அதேபோன்று முத்தரசநல்லூர் இல் தனியார் நிறுவனத்தினர் தங்கள் தொழில் சார்ந்த கனரக இயந்திரங்களை வரிசையாக நிறுத்தி

Advertisement

பூஜைகள் நடத்தி ஆயுதபூஜையை சிறப்பாக கொண்டாடினர், இதேபோல், மாணவ, மாணவிகள் தங்களது கல்வி சிறக்க வேண்டி, நோட்டு, புத்தகங்களை வைத்து சரஸ்வதியை வழிபடுகின்றனர். இதன்படி, பொதுமக்கள் தங்களது வீடுகளில் பூஜைகளை செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இதையடுத்து, விஜயதசமி நாளை கொண்டாடப்படுகிறது.