அன்பில் அறக்கட்டளை சார்பில் நலத்திட்டம் மற்றும் மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசு

அன்பில் அறக்கட்டளை சார்பில் நலத்திட்டம் மற்றும் மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசு

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடி அன்பில் தர்மலிங்கத்தின் மகனும், தமிழக முதல்வரின் உயிர் நண்பருமான அன்பில் பொய்யாமொழி அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் அன்பில் 25 என்னும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது 

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் தந்தை அன்பில் பொய்யாமொழி 25 ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி அன்பில் அறக்கட்டளையின் சார்பாக தனியார் பள்ளியில் ஏழை எளிய பெண் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளான தையல் மிஷின் வழங்கப்பட்டது. மேலும் தமிழகத்தில் சிறந்து விளங்கும் மாணவிகளுக்கு நினைவு பரிசு மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது.

மேலும் நல்லாசிரியர் மற்றும் சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்கள் நூலக ஆசிரியர்கள், ஏழை எளிய மாணவர்களுக்கு உதவும் ஆசிரியர்களுக்கு அன்பில் அறக்கட்டளையின் சார்பாக நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, மண்டல குழு தலைவர் மதிவாணன், முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி மற்றும் அன்பில் அறக்கட்டளையைச் சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உரையாற்றியதாவது.... கலைஞர் கூறியதை போல் நாம் அரசியலுக்கு வந்தோம் அரசியலில் பயணித்தோம் என்று இல்லாமல் நாம் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் நம்மால் மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த அன்பில் அறக்கட்டளை என்றும், இந்த அன்பில் அறக்கட்டளை மூலம் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருவதாகவும், நான் வேலைக்காக அலைந்து திரிந்த பொழுது எனது காலணிகள் தேய்ந்து காணப்படும் அப்பொழுது உழைப்பின் முக்கியத்துவம் என்ன என்பதை நான் அறிந்திருந்தேன் என்றும், எனவே வேலைக்காக அன்றாடம் பாடுபடும் இளைஞர்களுக்காக உருவாக்கப்பட்டது தான் இந்த அன்பில் அறக்கட்டளை என்றும்,

இந்த அன்பில் அறக்கட்டளை மூலம் எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மாணவ மாணவிகளுக்கு நாங்கள் செய்து வருகிறோம். எனவே பெற்றோர்களிடம் நான் தாழ்மையாக கேட்டு கொள்வது என்னவென்றால் பக்கத்து வீட்டு பையன் படிக்கிறான் நீ எவ்வாறு படிக்கிறாய் என்று தனது பிள்ளையை திட்ட வேண்டாம் என்றும் அவனைத் தாழ்வு மனப்பான்மைக்கு தள்ள வேண்டாம் எனவும் எடுத்துரைத்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision