உலக செயல்முறை மருத்துவம் (ஆக்குபேஷனல் தெரபி) தின விழிப்புணர்வு பேரணி
உலக ஆக்குபேஷனல் தெரபி தினத்தை முன்னிட்டு ஆக்குபேஷனல் தெரபி கல்லூரி (SRMIST) சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியானது பொதுமக்கள், மருத்துவ நிபுணர்கள், நோயாளிகள் மற்றும் சமுதாயத்தினரிடையே அக்குபேஷனல் தெரபி பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கும் நோக்கத்தில் நடத்தப்பட்டது. இப்பேரணி எஸ்ஆர்எம் திருச்சி மற்றும் ராமாபுரம் தலைவர் சிவக்குமார் மற்றும் (SRMIST) தலைவர் நிரஞ்சன் ஆகியோரின் வழிகாட்டுதல்படி நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி SRMIST வளாகத்தில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்பேரணியில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளி நோயாளிகளின் மறுவாழ்வில் ஆக்குபேஷனல் தெரபியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். உளவியல், சமூக, அறிவாற்றல் பிரச்சனைகள் தனிப்பட்ட கவனிப்பு, சமூக வாழ்க்கை மற்றும் தொழில்சார் அம்சம் போன்ற அவர்களின் வாழ்க்கையின் அனைத்து பகுதியிலும் செயல்பாட்டு சுதந்திரத்தை மீண்டும் பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு ஆக்குபேஷனல் தெரபி உதவுகிறது என்று தெரிவித்தார்.
நேரு யுவ கேந்திராவின் மாவட்ட இளைஞர் அலுவலர் கூறுகையில்... பக்கவாதம், தலையில் காயம், பார்கின்சோனியம, முதுகுத்தண்டு காயம், பெருமூளை வாதம், மனநல குறைபாடு, ஆட்டிசம், மனச்சோர்வு, ஸ்கிசோஃப்ரினியா, ஹிஸ்டீரியா போன்றவற்றால் பாதிக்கப்படும் இளைஞர்களிடையே சிறந்த வாழ்க்கைத் தரத்தை அடைய அனைத்து தடைகளையும் போக்க ஆக்குபேஷனல் தெரபி சிகிச்சையாளர்களால் உதவுகிறார்கள் என்று வலியுறுத்தினார்.
திருச்சிராப்பள்ளி வளாகத்தில் உள்ள SRMIST பொறியியல் கல்லூரி மற்றும் தொழில்நுட்பத்தின் டாக்டர் மால் முருகன் வாழ்த்துரை வழங்கினார். ஆக்குபேஷனல் தெரபி கல்லூரி டீன் சுரேஷ் வரவேற்புரை ஆற்றினார். எஸ்ஆர்எம் திருச்சி வளாக இணை இயக்குனர் டாக்டர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn