மூதாட்டியை கொன்று நகைகள்‌ கொள்ளையடித்த வாலிபர் கைது - 3 பேர் தலைமறைவு

மூதாட்டியை கொன்று நகைகள்‌ கொள்ளையடித்த வாலிபர் கைது - 3 பேர் தலைமறைவு

திருச்சி மாவட்டம், மணப்பாறை மஸ்தான் தெரு பகுதியைச் சேர்ந்தவர் நாகப்பன். இவரது மனைவி கல்யாணி (69). நாகப்பன் எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 3 ம் தேதி கணவர் மற்றும் மகன் கடைக்குச் சென்றவிட்ட நிலையில் வீட்டில் மூதாட்டி மட்டும் தனியாக இருந்துள்ளார். மதியம் அவரது மகன் ராமநாதன் உணவு வாங்குவதற்கான வீட்டிற்கு சென்று பார்த்த போது வீட்டின் சமயலறையில் கல்யாணி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

மேலும் அவர் அணிந்திருந்த 16 சவரன் மற்றும் 30 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் அப்பகுதியில் வீடுகளுக்கு தண்ணீர் கேன் போடும் மணப்பாறை அருகே உள்ள பன்னப்பட்டி, சமத்துவபுரத்தைச் சேர்ந்த கேசவன் (28) என்பவரை அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அவர் தண்ணீர் கேன் போடுவது போல் சென்று நோட்டம் விட்டு மூதாட்டி தனியாக இருப்பதை அறிந்து தனது நண்பர்களுடன் வீட்டினுள் நுழைந்து மூதாட்டியை முகத்தில் கையை வைத்து அழுத்தி மூச்சை நிறுத்தி கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த ‌16 சவரன் நகை மற்றும் ரூ.30,000 பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்றதாக தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த மணப்பாறை போலீசார் அவர் பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் 18 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய புத்தாநத்தம், கம்பிளியம்பட்டியைச் சேர்ந்த ராமச்சந்திரன், சித்தாநத்தம், கலிங்கப்பட்டியைச் சேர்ந்த ராமன், திருவண்ணாமலையைச் சேர்ந்த வெங்கடேசன் ஆகிய மூன்று பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். தண்ணீர் கேன் போடும் பணியில் இருந்த ஊழியரால் நடந்த கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision