அதிமுக மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது

Feb 20, 2021 - 00:14
Feb 20, 2021 - 00:14
 160
அதிமுக மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது

திருச்சி மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளரும், சுற்றுலா துறை அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தலைமை வகித்தார்.

இதில் பேசிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்...

திருச்சி வழியாக புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் புதிய திட்டபணிகள் துவக்கவிழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு திருச்சி விமான நிலையத்தில் மாநகர் மாவட்ட கழகம் சார்பில் எழுச்சியான வரவேற்பு அளிக்க வேண்டும்.

வருகிற சட்டமன்ற தேர்தலில் திருச்சி மாநகர் மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட கிழக்கு, மேற்கு  ஆகிய தொகுதிகளில் போட்டியிட விருப்பமுள்ள நபர்கள், கழக பொறுப்பாளர்கள், கடைக்கோடி தொண்டர்கள் முதல் மாநில நிர்வாகிகள் வரை விருப்பு வேட்புமனு தாக்கல் செய்ய முன் வர வேண்டும்.

அம்மா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்ட கழகம் சார்பில் திருச்சி மாநகரில் ஆங்காங்கே பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்த வேண்டும்.

தலைமை அறிவுறுத்தலின்படி, சட்டமன்ற தேர்தலில் பணியாற்ற இளைஞர், இளம்பெண்கள் பாசறை,  மகளிர் குழு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன் முழுமையான பட்டியல் வழங்கப்பட்டு, மண்டல பொறுப்பாளர் ஆய்வு நடத்தி இறுதி செய்வார் இதற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இக்கூட்டத்தில் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் ஜாக்குலின், அவைத்தலைவர் மலைக்கோட்டை ஐயப்பன், பகுதி கழக செயலாளர்கள், வட்டக் கழக செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM