தியானத்தில் அமர்ந்த அண்ணாமலை

தியானத்தில் அமர்ந்த அண்ணாமலை

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு தூய தமிழ் மொழியில் அத்வைத நூல்களை இயற்றிய ஞானியார் ஶ்ரீ தாண்டேஸ்வர ஸ்வாமிகள் ஜீவ சமாதி நன்னிலம் நகரில் உள்ளது. அவர் இயற்றிய "கைவல்ய‌‌ நவநீதம்" என்னும் நூல் சித்தர்கள் வழிபாட்டிலும் ஆன்மீகத்திலும் நாட்டம் கொண்ட பா.ஜ.க தலைவர் K.அண்ணாமலையிடம் வேளாங்கண்ணி நகரில் வைத்து வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் அகில பாரதீய சந்நியாசிகள் சங்கத்தின் டெல்டா மண்டல பொறுப்பாளர் சுவாமி கோரக்ஷ்னந்தா தென்பாரதக் கும்பமேளா கும்பகோணம் மகாமக அறக்கட்டளை செயலாளர் வி.சத்தியநாராயணன் பொருளாளர் வேதம் முரளி ஆகியோர் பங்கேற்றனர்.

ஶ்ரீ சிருங்கேரி ஜகத்குரு ஶ்ரீ மத் வித்யாரண்யரிடம்‌ சீடராக இருந்து சகல அத்வைத நூல்களையும் மாசறக் கற்று ஞானியானவர் ஶ்ரீ நாராயணகுரு, அவர் வாழ்ந்த காலம் 1378 - 1449 ( 71) ஆண்டுகள். ஞானியாரின்‌ சீடர் ஶ்ரீ தாண்டேஸ்வர ஸ்வாமிகள் " கைவல்ய‌ நவநீதம் " எனும் ஞானநூலை தமிழில் இயற்றினார். இந்நூல் ஶ்ரீ ரமண மகரிஷி அவர்களால் பெரிதும் போற்றப்பட்டது. மேலும் இந்நூல் 1855ம் ஆண்டு ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழிகளில் வெளியிடப்பட்ட சிறப்பு மிக்கது. ஶ்ரீ தாண்டேஸ்வர ஸ்வாமிகள் வாழ்ந்த காலம் 1408 - 1534 (126) ஆண்டுகள்.

ஶ்ரீமத் நாராயணகுரு அவரின் சீடர் ஶ்ரீமத் தாண்டேஸ்வர ஸ்வாமிகள் ஆகிய இருவரும் முக்தியடைந்த ஜீவ சமாதி நன்னிலம் நகரம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது. மெய்யன்பர்கள்‌ சென்று அருள் பெற்றுய்க!.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision