திருச்சியில் அரை சதம் அடித்த கொரோனா
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று இரண்டு மூன்று என அலைகளாக வந்து பொதுமக்களை அச்சுறுத்தியது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும், தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொண்டது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டுமென அறிவுறுத்தி இருந்தது. கடந்த ஒரு ஆண்டு கொரோனா தொற்று இல்லாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.
திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனை மற்றும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 48 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று ஒரேநாளில் மட்டும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆறு பேர் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்து அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி மாவட்டத்தில் 57 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.