திருச்சி காந்தி சந்தை 30 மணி நேரம் மூடப்படுகிறது ஆணையர் அறிவிப்பு
கோவிட் தொற்று இரண்டாவது அலை பரவலை தடுக்க
திருச்சி காந்தி சந்தை இன்று இரவு 10 மணிக்கு மூடப்பட்டு திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு தான் மீண்டும் திறக்கப்படும் மாநகராட்சி அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் ஏற்கனவே அறிவிப்பு கொடுத்து உள்ளனர்.
திருச்சி மாநகராட்சி உட்பட்ட பகுதியில் வேறு எங்கும் தற்காலிக சில்லறை வியாபார காய்கறி சந்தைகள் கிடையாது. பொதுமக்கள் காந்தி சந்தையில் மட்டுமே காய்கறிகளை வாங்க முடியும் .சில்லரை விற்பனைக்கு ஏற்கனவே பொன்மலை ஜி-கார்னர் பகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால் வியாபாரிகள் யாரும் அங்கே செல்லவில்லை. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை இன்று இரவு 10 மணிக்குள் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திருச்சி மாநகராட்சியில் இதுவரை 14 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு முறையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
காந்தி சந்தை மூலம் கோவிட் தொற்று இதுவரை ஏற்படவில்லை தொடர்ந்து முறையாக கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
நாளொன்றுக்கு 2,500 மாதிரிகள் பொதுமக்களிடம் எடுக்கப்பட்டதில் 90லிருந்து 95 பேருக்கு கோவிட் தொற்று உள்ளது தெரியவருகிறது திருச்சி மாநகர பகுதிகளில் வருவதாக ஆணையர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu