திருச்சி குழுமணி  உய்யக்கொண்டான் வாய்க்கால் புலிவலம் மணற்போக்கியில்   ரூ29.70லட்சத்தில்  தூர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு

திருச்சி குழுமணி  உய்யக்கொண்டான் வாய்க்கால் புலிவலம் மணற்போக்கியில்   ரூ29.70லட்சத்தில்  தூர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு

காவிரி டெல்டா பகுதியில் தூர்வாரும் பணிக்காக திருச்சி மண்டலத்தில் 589 பணிகளுக்கு 6290.50 லட்சத்திற்க்கும்   சென்னை மண்டலத்தில் 58 பணிகளுக்கு 220லட்சத்திற்க்கும் தமிழக அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 அதனடிப்படையில் திருச்சி ஆற்று பாதுகாப்பு கோட்டத்தின் கீழ் பாசன ஆதாரங்களில் திருச்சி மாவட்டத்தில் 20 பணிகளுக்கு 177.30 லட்சம் மதிப்பீட்டில் 66.11 கிலோமீட்டர் தூரம் தூர்வார பணிகள் நடைபெறுகிறது. உய்யகொண்டான் வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கத்தின் கோரிக்கை, கொடியாலம் மற்றும் புலிவலம் கிராமத்தில் உள்ள புலிவலம் மணற்போக்கிலிருந்து வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்பட கோரிக்கை வைக்கப்பட்டது. விவசாயிகளின் கோரிக்கை ஏற்று  புலிவலம் மணற்போக்கி வடிகால் வாய்க்கால் 100 மீட்டர் முதல் 1200 மீட்டர் வரை தூர்வாரும் பணிக்கு 29.70லட்சத்தில் மூன்று பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.   


நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட
அமைச்சர்கள் மாவட்ட ஆட்சியர் சிவராசு பொதுப்பணித்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

இன்று மாலை 5 மணியளவில் திருச்சி விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் தமிழக முதல்வர் சேலம் புறப்பட்டு செல்கிறார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve