புற்றுநோயை கண்டறிய 1.40 கோடியில் அதிநவீன நடமாடும் வாகனம்!!

புற்றுநோயை கண்டறிய அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய நடமாடும் வாகனத்தின் பயன்பாட்டை கரூரில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தொடங்கி வைத்தார்.

உலகம் முழுவதும் உள்ள பல ரோட்டரி சங்கங்களின் உதவியுடன் சுமார் 1.40 கோடி செலவில் மக்களுக்காக இதனை அர்ப்பணித்துள்ளனர். இதில் கரூர் ரோட்டரி சங்கம், திருச்சி மெட்ரோ ரோட்டரி சங்கம், ஜப்பான் நாட்டின்2770-ல் உள்ள ஹவாஈஸ்ட் ரோட்டரி சங்கம், பிரேசில் நாட்டில் உள்ள ரோட்டரி மாவட்டங்கள் 4490, 4310, 4590 ஆகியவற்றின் சார்பில் வழங்கப்பட்டது. இந்த நடமாடும் வாகனம் பொதுமக்களுக்கு அனைத்து சோதனைகளையும் இலவசமாக மேற்கொள்ளப்படவுள்ளது. வாகனத்தில் உள்ள வசதிகள், கருவிகளின் பயன்பாட்டை அமைச்சர் பார்வையிட்டு அறிந்தார்.

Advertisement

திருச்சி கே.எம்.சி சிறப்பு மருத்துவமனை மற்றும் கரூர் ஷோபிகா இன்பெக்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் 21 லட்சம் மற்றும் 42 லட்சத்தை பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்காக வழங்கியுள்ளனர். ஜப்பான் மற்றும் பிரேசில் ரோட்டரி சங்கங்கள் இந்த வாகனத்திற்காக 78 லட்சத்தை வழங்கியுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட ஆளுநர் கோபாலகிருஷ்ணன் (ரோட்டரி மாவட்டம் 3000) திருச்சி கே.எம்.சி நிர்வாக இயக்குனர் மணிவண்ணன், ஷோபிகா இன்பெக்ஸ் நிர்வாக இயக்குனர் சிவசாமி, ரோட்டரி அறக்கட்டளையின் துணை மண்டல ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன், ரோட்டரி ஆளுநர் சொக்கலிங்கம், அறக்கட்டளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் ரோட்டரி மாவட்டம் 3000, பிரேசில், ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளைச் சேர்ந்த ரோட்டரி சங்க உறுப்பினர்கள் காணொலி காட்சி மூலமாக இணைந்து பங்கேற்றனர்.