திருச்சியில்15 மயில்கள் உயிரிழப்பு - 80 வயது முதியவர் கைது

திருச்சியில்15 மயில்கள் உயிரிழப்பு - 80 வயது முதியவர் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் முகவனூர் தெற்கு முத்துக்கருப்பண்ணப்பிள்ளை குளம் பகுதியில் உள்ள பிச்சை என்பவரது கடலை காட்டில்  8 பெண், 7 ஆண் என 15 மயில்கள் மர்மமான முறையில் ஆங்காங்கே செத்து கிடந்தது. தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற வனச்சரகர் மகேஷ்வரன் தலைமையிலான வனத்துறையினர், விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அங்கிருந்த கடலை காட்டில் 21 இடங்களில் தீவணமாக அரிசி வைக்கப்பட்டிருந்ததும், அரிசியை இரையாக உட்கொண்ட மயில்கள் உயிரிழந்தும் தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து மயில்களின் உடல்களை கைப்பற்றிய வனத்துறையினர் பொத்தப்பட்டி கால்நடை மருந்தகத்தில் மருத்துவர்கள் ரமேஷ், மாரிமுத்து ஆகியோரால் உடற்கூராய்வு மேற்கொண்டனர்.

பின்னர் மயில்களின் உடல்கள் முகவனூர் காப்பு காட்டில் புதைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வனத்துறையினர், நில உரிமையாளரான அஞ்சல்காரன்பட்டியை சேர்ந்த தானியல் மகன் பிச்சை(80)-யை வன அலுவலகம் அழைத்து சென்று மேற்கொண்ட விசாரணையில், பிச்சை தன் நிலத்தில் உள்ள கடலைகளை எலிகள் திண்றுவிடுவதால் அவற்றுக்கு

விஷம் கலந்த அரிசியை வைத்ததாகவும், அதை மயில்கள் திண்றதால் அவை உயிரிழந்துள்ளதையும் ஒப்புக்கொண்டார். அதனைத்தொடர்ந்து பிச்சையை கைது செய்த வனத்துறையினை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH           

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO