அனைத்திந்திய மாணவர் பெருமன்ற திருச்சி மாநகர் மாவட்ட 15வது மாநாடு

அனைத்திந்திய மாணவர் பெருமன்ற திருச்சி மாநகர் மாவட்ட 15வது மாநாடு


அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்  திருச்சி மாநகர் மாவட்ட 15வது மாநாடு 8.1.2023 அன்று உறையூர் ராமலிங்க நகர் பகுதியில் அமைந்துள்ள கூட்டுறவு மினி ஹாலில் மாணவர் பெருமன்ற மாவட்ட தலைவர் என்.எஸ்.பாட்ஷா மற்றும் ஆர்த்தி தலைமையில்  நடைபெற்றது. மாணவர் பெருமன்ற மாநில துணைச் செயலாளர் ஜி‌.ஆர். தினேஷ்குமார் கொடியேற்றி துவக்க உரையாற்றினார்.

தொடர்ந்து அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் முன்னாள் மாநில செயலாளர் எம். செல்வராஜ், முன்னாள் மாநில தலைவர் ஆர்.மணி மோகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ். சிவா ஏ ஐ டி யு சி பொதுச் செயலாளர் க.சுரேஷ், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட செயலாளர் எஸ்.சூர்யா மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் இரா.சுரேஷ் முத்துசாமி, எம். ஆர்.முருகன், டி.ராஜா, சையது அபுதாகிர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.மணவர் பெருமன்ற மாநகர் மாவட்ட செயலாளர் க.இப்ராகிம் வேலை அறிக்கையை வாசித்தார்.

தொடர்ந்து 15 பேர் கொண்ட புதிய மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது. அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் திருச்சி மாநகர் மாவட்ட தலைவராக க.இப்ராஹிம், துணைத் தலைவராக என்.எஸ்.பாட்ஷா, எம். நந்தகுமார், து.அஜித் குமார்,
மாவட்ட செயலாளராக ஆர்.கார்த்திக், செயலாளராக துணைச் செயலாளராக எம். சுதர்சனம், எம்.ஜெய்லானி, டி. சஞ்சய், பொருளாளராக த.ஜீவானந்தம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 

 தொடர்ந்து மாணவர் பெருமன்ற மாநில நிர்வாக குழு உறுப்பினர் எம். செல்வகுமார் நிறைவுற்றினார். இறுதியாக முன்னாள் மாவட்ட பொருளாளர் கௌதம் நன்றி கூறினார்.

தீர்மானம்:-
 
மேலும் மாநாட்டில் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை  கட்டணம் இல்ல தரமான கல்வியை அரசே வழங்க வேண்டும், மாணவர்கள் மீது சுமத்தப்படும் பல்வேறு வகையான கட்டண கொள்ளையில் இருந்து மாணவர் நலனை பாதுகாக்க வேண்டும், தற்போது அதிகரித்து வரும் மதவெறி கலாச்சாரத்தில் இருந்து கல்வி வளாகங்களை பாதுகாக்க வேண்டும்,  20 பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்த அனுமதி தராமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வரும் ஆளுநர் ஆர் .எம் .ரவியை கண்டித்தும் மற்றும் கேந்திர வித்யாலயா பள்ளியில் தமிழை பயிற்று மொழியாக கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH 

     
#டெலிகிராம் மூலமும் அறிய....  https://t.me/trichyvisionn