18 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் திருச்சிக்கு வந்தடைந்தது
கொரோனா இரண்டாவது அலை தற்போது தீவிரமடைந்து உள்ளது. இந்த சூழலில் பொதுமக்கள் கொரோனா அச்சம் காரணமாக தடுப்பு ஊசி செலுத்தி கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்தை பொறுத்த வரை கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வந்தாலும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை சற்று கூடுதலாக உள்ளது.
கொரோனாவிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறது. திருச்சி மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 33 ஆயிரத்து 574 பேர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில் மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 4 லட்சத்து 95 ஆயிரத்து 570 தடுப்பூசிகள் நேற்று மாலை சென்னைக்கு வந்தது. அதனையடுத்து மாவட்ட வாரியாக சென்னைக்கு 54 ஆயிரத்து 570 தடுப்பூசிகளும், கோவைக்கு 48 ஆயிரம் தடுப்பூசிகளும், திருச்சி மாவட்டத்திற்கு 18 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளது.
சென்னையிலிருந்து இன்று காலை திருச்சிக்கு வந்த தடுப்பூசிகள் அனைத்தும் மாநகராட்சியில் அலுவலகத்தில் உள்ள மண்டல தடுப்பூசி அறையிலிருந்து தடுப்பூசிகள் பிரித்து தஞ்சை, கோவை, மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்று காலை தடுப்பூசி வந்ததால் திருச்சியில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC