திருச்சியில் மக்களிடம் குறைதீர் மனுக்களை பெற்ற 2 அமைச்சர்கள்

திருச்சியில்  மக்களிடம் குறைதீர் மனுக்களை பெற்ற 2 அமைச்சர்கள்

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்  கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டு மனுக்களை வாங்கி அதன் மீது தீர்வு காண நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு , பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (20.12.2021) திருச்சிராப்பள்ளி - திண்டுக்கல் சாலையில் உள்ள கேர் கல்லூரியில் நடைபெற்ற சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை மேற்கொண்டனர்.

குறைதீர்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, ஸ்டாலின்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, வருவாய் கோட்டாட்சியர் சிந்துஜா, முன்னாள் துணை மேயர் அன்பழகன், மாவட்டப் பிரமுகர் வைரமணி, ஒன்றியக் குழுத் தலைவர்கள் கமலம் கருப்பையா, துரைராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இலால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், சமயபுரம் தனலெட்சுமி சீனிவாசன் கல்லூரியில், கேர் (CARE) கல்லூரியிலும் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது.

இதையடுத்து திருச்சிராப்பள்ளி கண்டோன்மென்ட், செயிண்ட் ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாமில், பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கைகளை அமைச்சர்கள், அதிகாரிகள் மேற்கொள்கிறார்கள்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/Eyd4BfTFH1SEyxmvvYevul 

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn